பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் வேம்பின் பழம்பூ விரிந்ததைப்போல ஈயின் கூடும் எறும்பின் கூடும். - இருண்ட வீடு, ப. 22. இப்பாடலில் ஈயின் கூட்டையும் எறும் பின் கூட்டையும் வேம்பின்பூ விரிந்திருப்பதற்கு ஒப்புவகையாகக் காட்டு கிறார். இது போன்ற பாடல்களை இயற்கையை உவமை நிலையில் பயன்படுத்துவது" என்ற நிலைக்குச் சான்றாகத் தரலாம். உழைப்பவர் வறியராகவும் அவர் மனப் புண் ணிலே அம்பு பாய்ச்சும் புலையர்கள் செல்வராகவும் இருக்கும் ஏற்றத்தாழ்வு தம் மனத்தில் ஏற்படுத்திய வெறுப் புணர்ச்சியை வெளியிட இயற்கையின் துணையை நாடுகிறார் கவிஞர். விண்மீன்கள் நீந்தும் எந்த வானத்தைப் பலாப் பழமும் சுளைகளும் என வருணித்தாரோ அதே இரவு வானம் இப்போது உள்ள வெப்பத்தால் கொப்பளித்த உடம்பாகத் தெரிகிறது. ... ... ... இதைத்தன் கண்மீதில் பகலிலெல்லாம் கண்டுகண் டந்திக்குப் பின் விண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி - அழகின் சிரிப்பு, வான், ப. 34. என்று தம் வெறுப்பில் எழுந்த துயரத்தை வெளியிடு கின்றார். இது போன்ற பாடல்கள் பல அவர் பாடல்களில் உள்ளன. இவற்றை இயற்கையைப் பயன்படுத்தித் தம் கருத்தை வெளியிடல் என்ற நிலைக்கு உதாரணமாகக் காட்டலாம். அவள் தனி ஒப்பவில்லை அவன், அவள் வருந்தும் வண்ணம் தவறிழைக்கின்றான் இந்தத்