பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 91 தகாச்செயல் தன்னை, அன்பு தவழ்கின்ற புறாக்கள் தம்மில் ஒருசில தறுதலைகள் கவலைசேர் மக்களின்பால் கற்றுக் கொண்டிருத்தல் கூடும். - அழகின் சிரிப்பு, புறாக்கள், ப. 44. இப்பாடலில் மக்களைக் கண்டு புறாக்கள் தவறிழைக்கக் கற்றுக் கொண்டதாகக் கூறி இயற்கையை மனித வாழ்வுடன் இணைத்துக் காட்டுகிறார். அறிவிலிகள் அரற்றுவது இயற்கையே. ஆகையால் பெரியவன் சிறியவன் என்ற பாகுபாடெல்லாம் தவறானது என்ற அறிவுரையைக் கவிஞர் புகட்டுகின்றார். வானம், உலகு முதலியவற்றின் அளவு கண்டு ஏற்பட்ட வியப் புணர்ச்சியோடு தத்துவார்த்தமான அறிவுரைகளையும் தருகின்றார். இதில் கவிஞரின் ஆன்மிக வளர்ச்சியும் தெளிவாகின்றது. எத்தனை பெரிய வானம்! எண்ணிப்பார் உனையும் நீயே இத்தரை, கொய்யாப்பிஞ்சு நீ அதில் சிற்றெ றும்பே அத்தனை பேரும் மெய்யாய் அப்படித் தானே மானே? பித்தேறி மேல்கீழ் என்று மக்கள்தாம் பேசல் என்னே? - அழகின் சிரிப்பு, வான், ப. 33. என்பன போன்ற பாடல்களில் இயற்கையின் மூலம் அரிய நீதிகளையும் பெரிய உண்மைகளையும் உரைக்கின்றார். எ பிற்காலத்து இலக்கியங்களில் குறிப்பிட்ட சில பொருள்களுக்குக் குறிப்பிட்ட சில உவமைகளைச் சுட்டுவது மரபாகி விட்டது; அந்த ар - Gl/ Gб) & 0 & Gб) аІТ விளக்கும்