பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் தொடர்கள் ஒரே மாதிரியாகத் திரும்பத்திரும்ப வருவதைக் காணலாம்' - என்று டாக்டர் மு. வரதராசனார் கூறுவது போலப் பாரதிதாசன் பாடல்களில் காலையில் சூரியன் உதயமாகும் வண்ணத்தைக் குறிக்கும்போது, விடிந்தது! தங்க வெயில் வந்தது என்றும், எங்கும் விழுந்தது தங்கத் தூற்றல் என்றும், - விண்ணையெல்லாம் பொன்னை அள்ளித் தெளிக்கின்றாய். என்றும், பகல் உடை தங்கச்சேலை என்றும், எழுந்தது பரிதிக் குழந்தை, கடலின் செழுலேத்தில் செம்பொன் தூவி! என்றும், தங்கம் உருக்கிப் பெருவான் தடவுகின்றான் செங்கதிர்ச் செல்வன் என்றும், செஞ்சூட்டுச் சேவல்கள் கூவின கேட்டிரோ மிஞ்சும் இருள்மீது பொன்னொளி வீழ்ந்ததுவே என்றும், நீல உடையூடு பொன்னிழை நேர்ந்ததென என்றும், அருவி, மலை, மரங்கள் அத்தனையும் பொன்னின் மெருகு படுத்தி விரிகதிரோன் வந்தான் என்றும்,