பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 93 எல்லாவிடங்களிலும் பொன்னையே உவமிக்கின்றார் பாவேந்தர் பாரதிதாசன். சங்க இலக்கியங்களில் இயற்கை மனித வாழ்வின் பின் புலமாக அமைந்ததைப் போலப் பாரதிதாசன் பாடல் களிலும் அமைந்துள்ளது. காலச் சூழலின் காரணமாகவும்: பாவேந்தர் புரட்சிக் கவிஞர் ஆதலானும் சில கருத்துகள் மாறியுள்ளன. பாவேந்தர் பாடல்களில் பொதுவுடைமை, பகுத்தறிவு இயக்கம் போன்ற பின்னணிகள் இயற்கை மூலம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. கபாரதிதாசன் பாடல்களில் இயற்கை என்று எண்ணும் போது, அழகுக்காகவும், தன் கருத்தை வெளியிட்டு இயற்கை மூலம் அறிவுறுத்துவதற்காகவும் பயன்படுத்தி யுள்ளார். o இயற்கையைச் சிறந்த முறையில் பாடியுள்ளதால் இவர் :இயற்கைக் கவிஞர் எனப் போற்றப்படுகிறார். இச் சிறப்புப் பெயர் இவருக்கு முற்றிலும் பொருத்தமானதே. அடிக்குறிப்புகள் 1. அ. ச. ஞானசம்பந்தன், இன்றைய இலக்கியம், பக். 81.83. 2. சங்க இலக்கியச் சொற்களஞ்சியம், திருவாவடு துறை ஆதீனம், 1965. 3. ஆராய்ச்சி இதழ், அக்டோபர் 1972, பாரதி தாசனும் கடவுட்கொள்கையும்', ப. 142. 4. டாக்டர் பீ. நசிமுதின்,பாரதிதாசன் பாடல்களில் இயற்கை, ப. 123.