பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II பாரதிதாசன் பாடல்களில் இலக்கியம் மனித இனத்தின் வாழ்வியல் நெறிகளை-உணர்வுச் சுழிப்புகளை, அனுபவ உண்மைகளைக் காலப் பின்னணி யோடு மொழி என்னும் ஊடகத்தின் வழியே உரைப்பது இலக்கியம். எனவே இலக்கியம் காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி எனச் சுட்டப் பெறுகிறது. இந்தப் பொது வரையறையோடு நில்லாமல் மேலும் சில கருத்துகள் இலக்கியத்தை விளக்கும் முகத்தான் கூறப்படுகின்றன. உள்ளத்திற்கு இன்பம் ஊட்டும் கற்பனை நிறைந்த நூல்களைப் பொதுவாக இலக்கியம் என்று நினைக்கிறோம். படிக்கப் படிக்க நமது நெஞ்சத்தைக் கவரும் நடை, உள்ளத்திற்கு மகிழ்ச்சியை/இன்பத்தை உண்டாக்கும். கருத்து நம்மைச் சிந்திக்கத் துரண்டும். சிறந்த மொழிகள், ஒருமுறை படித்தபின் விசி எறிந்து விடாமல் மீண்டும் படிக்க வேண்டும் என்னும் எண்ணத்தை எழுப்பும் தன்மை, அப்படியே திரும்பவும் படிக்கச் செய்யும் செயல், 'படித்தவைகளில் உள்ள பல செய்திகள் அப்படியே நம் உள்ளத்தில் தங்கிவிடும் இயல்பு, நமது வாழ்க்கையிலே தவறு நேராமல் நல்லமுறையில் நடந்து கொள்ளவேண்டும் என்னும் எண்ணத்தை உண்டாக்கும் சக்தி: பலதிறப்பட்ட அரிய பொருள்களை நாம் அறிந்து இன்புறச் செய்யும் பணி