பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் ஆகியன நிரம்பிய நூல்கள் இலக்கியங்களாகின்றன. இந்த இயல்புகள் நிரம்பிய நூல்கள் செய்யுளாயினும் உரை நடையாயினும் அவை இலக்கியங்களே எனத் துணிந்து கோடலாம். இவ்வகை இலக்கியங்கள் கவிதை, சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை ѕт зотLI பாகுபடுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் கவிதை இலக்கியம் காலத்தால் முற்பட்டது; தொன்மையானது. இன்றைய நிலையில், இலக்கியம் பல வகைகளைக் கொண்டது என்பதை அனைவரும் ஏற்பர். எனினும் அண்மைக் காலம் வரையில் இலக்கியம் என்றால் அது கவிதையை மட்டுமே சுட்டி நின்ற தன்மையை மறுப்பவர் இலர். தமிழ்மொழியில் மட்டுமன்றி, கீழ்த்திசை நாடுகளிலும் கவிதையொன்றே இலக்கியமாகக் கருதப்பட்டமை ஈண்டு நினைதற்குரியது. இலக்கியத்தின் பல கிளைகளுக்கும் வழிகாட்டியாகக் கவிதைக்கலை சிறப்புற்று விளங்குகிறது. எனவேதான் இலக்கியம் என்பது கவிதையின் நெகிழ்ச்சி மிக்க வடிவாகவும் கவிதை என்பது இலக்கியத்தின் செறிவுமிக்க வடிவாகவும் கருதப்படு கின்றன’’ என்று அறிஞர் உரைப்பர். இலக்கியம் என்னும் கலைக் குடும்பத்தில் மூத்த மகளாய்ப் பிறந்து விளங்கிய பாட்டு என்னும் செல்வி, தொடக்கத்தில் ஒரே செல்வ மகளாக விளங்கிய காலம் பழங்காலம். காவியம் நாடகம் அகம் புறம் முதலாய எல்லாக் குடும்பப் பொறுப்புக்களையும் அந்த மூத்த மகளே மேற் கொண்டு செம்மையாக நடத்தி வந்தாள். அவளை அடுத்துத் தங்கையர் பிறந்து வளர வளர அப் பொறுப்புக்கள் ஒவ்வொன்றாய் அவள் கையை வி ட் டு நழுவலாயின. இன்று அவளுடைய தங்கையர் தொடர் கதை, சிறுகதை, நாடகம், கட்டுரை முதலியன மேற்கொண்டு தமக்கையை