பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 97 விட்டுப் பிரிந்து செல்வாக்குடன் வாழ்கின்றனர். மூத்த மகளாகிய பாட்டு, பிறந்த வீட்டிலேயே நின்று, பழைய செல்வங்களைத் தங்கையர்க்கு வாரி வழங்கிய பின், தன்னுணர்ச்சி, சமுதாய உணர்ச்சி ஆகிய இருவகைப் பொறுப்புகள் மட்டும் உடையவளாய் வாழ்கின்றாள். தன் முன்னைய சீரும் சிறப்புமான பெருவாழ்வை நினைந்து இன்புறும் பேறு அவளுக்கு இன்று உள்ளது: என்று கவிதையின் மேன்மையை, தொன்மையைத் தெளிவு படுத்துகின்றார் டாக்டர் மு. வ. கலையழகு மேம்படும் கவிதையின் கூறுகளாக உணர்ச்சி, கற்பனை, கருத்து, வடிவம் என்ற நான்கும் கூறப் படுகின்றன. இவை பொதுவாக ஒவ்வோர் இலக்கியத் திற்கும் உரியவை என்றாலும் கவிதைக்கே பெரிதும் இன்றியமையாது வேண்டப்படுகின்றன. இந்த நான்கு கூறுகளின் அடியாகவே கவிதை மதிப்பிடப்படுகிறது. கவிதையை உணர்ந்து சுவைப்பதற்கும், அதன் பயன் பாட்டை மதிப்பிடுவதற்கும் என இரு நிலைகளில் இக் கூறுகள் அமைந்து சிறக்கின்றன. காட்சி, கேள்வி, உணர்வு மூன்றின் அடிப்படையில் அனுபவம் பிறக்கின்றது. பிறக்கும் அனுபவம் உணர்ச்சி மயமானது; அது கற்பனையைத் துாண்டுகிறது. அக்கற்பனை கவிஞனுக்கேற்ப மாறுபடு கிறது. கற்பனையில் திளைக்கும் கவிஞன் தன் எண்ணங் களை - குறிக்கோள்களை - எதிர்கால நம்பிக்கைகளைதொலை நோக்குச் சிந்தனையினை வெளிப்படுத்துகிறான். அதுவே கருத்தாகக் கொள்ளப்படுகிறது. அக்கருத்து படிப்போரை எளிதில் சென்று சேரும் வண்ணம் கையாளும் இலக்கிய உத்திகள் - சொல்லாட்சி நிலைகள், ஒர் ஒழுங்கான கலைத் தன்மையை அளிக்கின்றன. அது வடிவம் எனப்படுகிறது. இவ்வாறு இக்கூறுகள் ஒன்றோடொன்று தொடர்புடைய - பிணைப்புண்ட நிலையில் பிறக்கும்