நூன்முகம் ix இப்படி 1972இல் பாராட்டுவதற்கு ஆறு ஆண்டுகள் முன்ன தாகவே, பெரியார், ஈரோடு சிக்கையா கல்லூரியில், நெ.து. சுந்தரவடிவேலு பகுத்தறிவுப் போட்டிப் பரிசுகள் வழங்க அறக் கட்டளையை நிறுவினார். இச்சிறப்பினை என் ஒருவனுக்கே பெரியார் செய்துள்ளார் என்பதை இப்போது சொல்லாமல் எப்போது சொல்வது? நெ.து.சுந்தரவடிவேலு, பகுத்தறிவு வாதியாகவும், உண்மை யான சமதர்ம வாதியாகவும் வாழ்வதன் பெருமை எனக்கா உரியது? இல்லை. தந்தை பெரியாருக்கும் அவருடைய தன்மான இயக்கத்திற்கும் உரியதாகும். தன்மான இயக்கத்தின் முதல் தலைமுறையினன் என்னும் உரிமை யாலும், கட்சி தாவாத தன்மான இயக்கத்தவன் என்னும் தகுதி யாலும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்று. அது என்ன? தொடக்க கால சுயமரியாதை இயக்கத்தின் சாதாரணத் தொண்டரின் கனவிலும் சாதிப்பற்று எந்நேரத்திலும் பளிச்சிட்ட தில்லை. மனித இனத்தைச் சேர்ந்தவர்கள், பகுத்தறிவுப் பெருங் குடும்பத்தவர்கள், என்னும் உணர்வே எங்கள் மூச்சாகும். 'ஓர் புரட்சியாளரின் மலர்ச்சி' என்ற தலைப்பில், 2, 3, 4-4-79 நாட்களில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினேன். முதல் நாள் சொற்பொழி விற்குத் துணை வேந்தர் பேராசிரியர் ஜி.ஆர். தாமோதரன் தலைமை தாங்கிச் சிறப்பித்தார். அவருக்கு நன்றியுடையேன். அடுத்த இரு நாட்களும் தலைமைதாங்கிய பேராசிரியர் சி.ஏ. பெருமாள் எனது நன்றிக்கு உரியவர். சொற்பொழிவுக் கூட்டங் களுக்கு வேண்டிய ஏற்பாடு செய்த பதிவாளர் திரு.C.K. குமார சாமிக்கும் நன்றி. அதை வெளியிட்டுக்கொள்ள உரிமை தந்த சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு நன்றியுடையேன். அச்சொற்பொழிவுகளின் அடிப்படையில் உருவானது 'புரட்சி யாளர் பெரியார்' என்னும் இந்நூல். இந்நூலை நன்முறையில் வெளியிட முன்வந்த எஸ். சந்த் அண்டு கம்பெனியாருக்கும் அதன் நிர்வாகி திரு. M. D. கோபாலகிருஷ்ணனுக்கும் தமிழ் மக்களும் நானும் பெரிதும் நன்றியுடையவர்கள் ஆவோம். இந்நூலுக்கான குறிப்புகளை, தகவல்களை, செய்திகளைச் சேகரிக்க உதவியது சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் ஆராய்ச்சி நூலகமாகும். வேண்டிய உதவிகளைத் தாராளமாகக் கொடுக்கும்படி ஆணையிட்ட திராவிடக் கழகப்
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/10
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை