பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'குடி அரசு' இதழ் . 89 எங்கே? நாம் உபயோகிக்கும் குளமோ, குட்டையோ, கிணறோ இவர்கள் தொடவோ கிட்ட வரவோ கூடாதபடி கொடுமை செய்கிறோம். அதனால் அவர்கள் அப்படியிருக்கிறார்களே அல்லாமல் அது அவர்கள் பிறவிக் குணமாகுமா? நம்மை யாராவது குளித்துவிடாமலும், வேஷ்டி துவைக்கவிடாமலும் செய்து விட்டால் நம்மீது துர்நாற்றம் வீசாதா? நம் துணி அழுக்காகாதா? நாம் பார்வைக்கு அசிங்கமாய் காணப்படமாட்டோமோ! அவர் களுக்குக் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் நாம் சவுகரியம் செய்துகொடுத்துவிட்டால் பின்னும் இவ்விதக் குற்றமிருக்குமா? ஆதலால் நாம்தான் அவர்களின் இந்நிலைக்குக் காரணமாய் இருக்கிறோம்.' உழைப்பே செல்வம்; அதுவே விளைச்சலுக்கு நீர்; உற்பத்திக்கு வேர். எனவே உழவுக்கும் தொழிலுக்கும் மதிப்புக் கொடுப்பது இயற்கை. உழைப்பை, உழைப்பாளிகளைப் போற்றுவதால்தான் பல நாடுகளும் சமுதாயங்களும் முன்னேறியுள்ளன. ஆனால், நம் இந்தியாவில், எவனோ, எப்போதோ, எழுதிவிட்டுப் போன தாகக் கூறப்படும் காட்டுக் கால கருத்துகள், இருபதாம் நூற்றாண்டிலும் போற்றப்படுகின்றன. அக்கருத்துகள் உழைப்பை இழிவு என்று கூறுகின்றன. சோம்பேறி வாழ்க்கையைப் பெருமைப்படுத்து கின்றன. பழைமையின் கொடிய கரங்கள் செய்யும் தீமைகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு இதோ: 1921ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் இரு அய்யர்கள் உழவுத்தொழிலை மேற்கொண்டார்கள். பார்ப்பன சமூகம் பொறுக்குமா அதை? அவ்விருவரையும் பார்ப்பன சாதியிலிருந்து விலக்கிவைத்தார்கள். என்னே அவர்களது குறுகிய மனப் பான்மை! சங்கராச்சாரியார் அப்பகுதிக்குவந்திருந்தபோது, அவ்விரு அய்யர் களும் அவருக்குக் காணிக்கை செலுத்த விரும்பினார்கள். சங்கராச் சாரியார் அதை ஏற்றுக்கொண்டாரா? இல்லை. சாதி உயர்வு தாழ்வைக் காப்பதற்காகவே உயிர் வாழ்கிற சங்கராச்சாரியார், 'பிழைப்பிற்காக உடலால் உழைப்பதென்பது பாவ காரிய மாகும். அந்தப் பாவத்தைச் செய்ததால் அவர்கள் பிராமணத் தன்மையைக் கெடுத்துக்கொண்டார்கள். அவர்களிடமிருந்து காணிக்கை பெற்றுக்கொள்ளமாட்டேன்' என்று கூறி மறுத்து விட்டார். அந்த இரு அய்யர்களும் காந்தியாருக்குக் கடிதம் எழுதி விளக்கம் கேட்டார்கள். என்ன பதில்?