பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 புரட்சியாளர் பெரியார் "ஒருவன் கலப்பையை கையாலே தொடுவது பாவம் என்று கூறி னால் இது உழைப்பையே கேலி செய்வது ஆகும்' என்று பதில் அளித்தார். விளக்கம் கிடைத்தது; விடுதலை கிடைக்கவில்லை; கொடுமையிலிருந்து இன்றும் விடுதலை கிடைக்கவில்லை. சாதிக் உத்தமபாளையம் வட்டம் சீலையம்பட்டில் தேர்ந்தெடுக்கப் பட்ட பஞ்சாயத்து கோர்ட்டு மெம்பர்களை, சாதி அடிப்படையில் கீழே உட்கார வைக்கிறார்கள். தாசில்தாருக்குப் புகார் செய்து யாதொரு முடிவும் ஏற்படவில்லை.' இப்படி திருவாளர்கள் எம். செல்லதுரை, முத்துவேலு ஆகிய இருவர், 'குடி அரசு'க்கு எழுதினார்கள். அதை 27-1-29இல் வெளியான 'குடி அரசு’ வெளியிட்டுள்ளது. சங்கர மடத்தைப்பற்றி மற்றொரு செய்தி. கும்பகோணத்தில் சங்கராச்சாரியார் குடியிருக்கும் தெருவில் கிறுத்தவர்கள் பஜனை செய்துகொண்டு போகக்கூடாது என்று தடுத்துவிட்டார்கள் என்னும் செய்தி 23-6-29 'குடி அர'சில் வந்துள்ளது. திருப்புவனம், ஆவியூர், பெரிய கருப்பக் குடும்பன் என்பவர் ஆதி திராவிடர். அவர் தொழில் தெருக் குப்பை வாருதல்; அவர் குப்பைகளை வண்டியில் கொட்டி நிரப்பிக்கொண்டு, மாட்டு வண்டியை ஓட்டி வந்தார். வரும்போது, குப்பை வண்டியின்மேல் உட்கார்ந்து ஓட்டி வந்தார். அவ்வூரார் கண்ணோட்டத்தில், இது பெருங்குற்றம். அவருக்கு தண்டனை கிடைத்தது தெரியுமா? என்ன வண்டியின்மேல் உட்கார்ந்து ஒட்டி வந்த அவரைக் கீழே தள்ளி அடித்தார்கள். சினம் ஆறவில்லை. குடும்பனின் பயிர் பச்சை களை, ஆடு மாடுகளை விட்டு மேய்த்தார்கள். அப்போதும் தணிய வில்லை. வெகுளி, குடும்பனின் வீட்டிற்கே தீ வைத்தார்கள். குடும்பன், கலெக்டருக்கு மனுச் செய்தார். நடவடிக்கை இல்லை. மனுப்போட்ட செய்தி ஊராருக்கு எட்டிற்று. மீண்டும் தண்டனை. குடும்பனைக் கட்டி வைத்து அடித்தார்கள். ஐம்பது ரூபாய் அபராதம் போட்டார்கள். இச்செய்தியை 24-11-29 'குடி அரசு' 'கொடுமை! கொடுமை!' என்ற தலைப்பில் வெளியிட்டது. அதோடு ஆசிரியர் குறிப்பாக "கலெக்டர் இதை கவனிக்கவேண்டும். அகமுடையவர்கள், இப்படி கெட்ட பெயர் எடுக்கக்கூடாது' என்று எழுதப்பட்டது. ஒருவேளைக் கஞ்சிக்கும் வழியற்ற இந்திய வறியவர்களை, இந்திய அரசும் வெள்ளைக்காரர் குடியேறிய நாடுகளும் கூடிப்பேசி,