பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘குடி அரசு' இதழ்.. 93 தொடர்ந்துள்ள செய்தியை 15-3-36 நாளைய 'குடி அரசு' வெளி யிட்டது. பல்லாவரம் கொளத்துமேட்டு வீதி வாசியான ஆதி திராவிடக் கிறுத்தவர் அந்தோனிராஜ் 24-4-36 அன்று அக்கிரகாரத்தில் வசிக்கும் ஒரு பிராமண ஆசிரியரிடம் பாடம் கற்றுக்கொண் டிருக்கும்போது, அதே வீதி ரங்கசாமி அய்யர், அவரை, பார்ப்பனத் தெருவிற்குள் நுழைந்ததற்காக செருப்பால் தாக்கியதாகக் கேள்விப்பட்டு, பல்லாவரம் திருச்சுளம் வாலிபர் சங்கம் கண்டித்த செய்தியை 3-5-36 நாளைய 'குடி அரசு' வெளியிட்டது. சில இடங்களில், தனி மாதா கோவில். கான்வென்டுகளில் தனி இருக்கை; தனி புதை இடம் ஆகிய தீமைகள் இடம் பெற்றிருந்தன. அதைப்பற்றி சென்னை கவர்னரிடம் திரு. எம். தேவதாசன் எம்.எல்.சி.யும், திரு. ஜி. ஆர். பிரேமையா, எம். எல்.சி.யும் புகார் மனு கொடுத்தார்கள். இதை கிறுத்தவ மதத்தில் தீண்டாமை' என்னும் தலைப்பில் 24-5-36 ‘குடி வெளியிட்டது. அரசு' 3-5-36 'குடி அரசு', சென்னை நகர ஓட்டல்களில், 'பஞ்சமர் களும் நாய்களும் பெருநோய்க்காரர்களும் நுழையக்கூடாது’ என்று அறிவிப்பு போட்டிருப்பதையும் இரயில்வே ஓட்டல்களில் 'பிராமணாள் மாத்திரம்' என்று அறிவிப்புப் பலகைகள் தொங்கு வதையும், மேட்டுப்பாளையம் இரயில்வே ஓட்டலில் 'சூத்திரருக்கு' என்று அறிவிப்பு போட்டிருப்பதையும் அம்பலப்படுத்திற்று. தென்னாற்காடு மாவட்டம் சாத்தப்பாடியில் சகஜானந்தம், ஆதி திராவிட மகா நாட்டை நடத்த ஏற்பாடு செய்திருந்தார். சாதி இந்துக்கள் மாநாட்டை நடத்தவிடவில்லை; அதைத் தடுத்து விட்டார்கள். வியாசர்பாடி சமதர்ம இளைஞர் கழகம் கூட்டம் போட்டு கண்டித்தது. அதை 19-7-36 ‘குடி அரசு' வெளியிட்டது. 1938ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நீடாமங்கலத்தில், காங்கிரசின் சார்பில் அரசியல் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. மாநாட்டுக்குப்போனவர்களில் தேவசகாயம், ரத்தினம், முகம் ஆகிய மூன்று ஆதி திராவிடர்கள் இருந்தார்கள். ஆறு சாப்பாட்டு வேளையில், எல்லோரும் வரலாம், என்று சொல்லி சாப்பாட்டிற்கு அழைத்தார்கள். இம்மூவரும் போய் மற்றவர்க ளோடு உணவு அருந்திக்கொண்டிருந்தார்கள். அவ்வமயம் உடையார் பண்ணை ஏஜென்ட் அவர்களைப் பார்த்துவிட்டார். அவர்களை அடித்தார். அவர்கள் ஓட ஓட விரட்டப் பட்டார்கள்.