பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடி அரசு' இதழ் 95 நாமறிந்து, நம் சமூகத்தில் ஒருவர், பிறவியில் உயர்வு, மற்றொருவர் தாழ்வு என்பதை மறக்க, வாலிபர்கள் வேலை செய்யவேண்டும். 'கோயிலுக்குள் எல்லா இந்துக்களும் சென்று தரிசனம் செய்ய நடத்தப்படும் இயக்கத்திற்கு ஆதரவு அளிக்கவேண்டும். 'தீண்டாதவர்களுக்கும் பெண்களுக்கும் நம் நாட்டார், சர்வ சுதந்திரம் கொடுக்கவேண்டும். பால்ய விவாகம் தடுக்கப்பட வேண்டும்' என்று அழுத்தந்திருத்த மாகக் கூறினார். இக்கருத்துகளை 24-11-29 அன்றைய 'குடி அரசு' நன்றாக வெளியிட்டது. அய்ம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் நாம், பயனற்ற விதண்டாவாதங்களிலும் குதர்க்கங்களிலும் தனியார்வம் காட்டுவது குறைந்தபாடில்லை. சாதி உயர்வு தாழ்வு உணர்வு இன்னும் தொலைந்தபாடில்லை. ஈ.வே. ராமசாமி, எல்லா சாதியாரும் பொது இடங்களில் நடக்க லாம் என்னும் உரிமைக்காக வைக்கத்தில் போராடி வெற்றி கண்டதை முன்னரே கண்டோம். அவ்வெற்றியின் எதிரொலி, பல இடங்களில் கேட்டது. பாலக்காட்டைச் சேர்ந்த கல்பாத்தி யிலும் எதிரொலித்தது. 'கல்பாத்தி தேர்விழாவில், தீண்டப்படாதவர், என்று விலக்கி வைக்கப்பட்டிருந்த ஈழவ சகோ தரர்கள், எவ்வித ஆட்சேபணை யும் இல்லாமல் கல்பாத்தி அக்கிரகாரத்திலும் கோவில் தெருக் களிலும் கூட்டம் கூட்டமாகச் சென்றார்கள். யாரும் தடுக்க வில்லை.' இப்படியொரு செய்தியை 24-11-29 'குடி அரசு' வெளி யிட்டது. கேரளப் பார்ப்பனர்களும் மேல்சாதிக்காரர்களும் ஐந்தே ஆண்டுகளில் காலமாற்றத்திற்கு ஏற்பத் திருந்திவிட்டார்கள். தமிழ்நாட்டின் நவக்கிரகங்கள் அய்ம்பதாண்டுகளுக்குப் பிறகும் திருந்த மறுக்கின்றனவே! 4 19-1-30இல் 'பால்கன் பெண்கள் வெற்றி' என்னும் தலைப்பில் துருக்கி கமால் பாட்சாவின் தலைமையில் பலதார மணத்தை ஒழித்துவிட்டதையும் கோஷா' முறையை அகற்றிவிட்டதையும் கிரீஸும் பலதார மணமுறையை சட்ட விரோ தமாக்கியதையும் 'குடி அரசு' வெளியிட்டுள்ளது. நம்பூதிரிகளின் மன மாற்றம் 6-4-30இல் திருவிதாங்கூரிலுள்ள கிடாங்கூரில், நாராயண நம்பூதிரிபாத் தலைமையில், நம்பூதிரி வகுப்பு சீர்திருத்த மாநாடு