பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 புரட்சியாளர் பெரியார் நடந்தது. ஒரு அரை நூற்றாண்டுக்கு முன்பே, கேரள நம்பூதிரி கள், அம் மாநாட்டில் ‘பூணூல் அணிவது இக்காலத்திற்கு ஏற்ற தாக இல்லை. பூணூல் தரிப்பதை விட்டுவிடவேண்டும்' என்று முடிவு செய்தார்கள். அங்கேயே பலர் பூணூல்களைக் கழற்றி சாம்பலாக்கினார்கள். எத்தனை இனிக்கும் செய்தி! ஏனோ. இந்த ஆர்வத்தை, பிற்காலத்தவர், திசை திருப்பிப் பாழாக்கி விட்டார்கள். ஏட்டிக்குப் போட்டியாக, மக்களைப் பிரித்துக் காட்டும் தேவையற்ற நடைமுறைகளைக் காப்பதில், சில முற்போக் காளர்கூட இன்றும் முனைவது வேதனை ஊட்டுவதாகும். அதே நம்பூதிரி வகுப்பு சீர்திருத்த மாநாட்டில், நம்பூதிரி பெண்கள் கோஷா முறையை விட்டுவிடவும், நம்பூதிரி பெண் களுக்கு மேனாட்டுக் கல்வி கொடுக்கவும் முடிவு செய்தார்கள். இதைக் 'குடி அரசு' நாடறியச் செய்தது. இத்தகைய செய்திகள் தமிழ் மக்களைத் தட்டி எழுப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போதும் தமிழ் மக்கள் தூக்கம் கலைய வில்லை. கல்வி நிலை பார்ப்பனரல்லாதாரே, எழுத்தறிவை அலட்சியப்படுத்திய போது, அவர்களைவிட வறுமையில் வாடிய ஆதி திராவிடர் என்போர் கல்வியைப்பற்றி கனவிலும் நினைக்கவில்லை. நாட்டுப் புறங்களில் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகள், சாதி இந்துக்கள் குடியிருந்த பகுதிகளில் இருந்தன. எனவே, ஒடுக்கப்பட்டவர்கள், ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்டவர்கள், பெரும்பாலும் ஊர்ப் பள்ளிகளுக்குப் போக முடியவில்லை. இதனால் அரசு, தாழ்த்தப் பட்டோர் என்று அழைக்கப்பட்டோர் குடியிருப்புக்கு அருகிலேயே, தனிப் பள்ளிகள் ஏற்பாடு செய்தது. 1934-35ஆம் ஆண்டின் பொதுக் கல்வி வளர்ச்சியை மதிப்பீடு செய்த சென்னை மாகாண ஆட்சி, அவ்வாண்டில் 46,554 பேர், ஆதி திராவிடர்களுக்கான பள்ளிகளில் படித்ததாகவும் அது அதற்கு முந்தைய ஆண்டைவிட 3,458 அதிகமென்றும் சுட்டிக்காட்டியது. அதோடு, ஒடுக்கப்பட்டுள்ளவர்களுக்குப் பிரவேச உரிமை 'உடைய பொதுப் பள்ளிகளில் பாதியில் மட்டுமே ஒடுக்கப்பட்டிருப்பவர்கள் சேர்க்கப் பட்டிருக்கிறார்கள். 'ஒடுக்கப்பட்டவர்கள் பிரவேசிக்க முடியாத இடங்களில் 674 பொதுப் பள்ளிகள் இருந்தன. அவைகளை, ஒடுக்கப்பட்டவர் களும் சேர்வதற்குத் தகுதியான இடங்களுக்குக் கூடிய விரைவில்