குடி அரசு' இதழ் .. 97 மாற்றிவிடும்படி மாவட்ட ஆட்சிக் கழகத் தலைவர்களும் நகராட்சி ஆணையர்களும் ஏற்பாடு செய்யவேண்டும். 'சில பொதுப் பள்ளிகளில் ஒடுக்கப்பட்டவர்களைச் சேர்த்ததால், சாதி இந்து மாணவர்கள் அப்பள்ளிகளிலிருந்து நீங்கிவிட்டதாகத் தெரிகிறது. தல அதிகாரிகள் உறுதியாக நடந்துகொண்டதை அரசு பாராட்டுகிறது' என்று மதிப்பீடு செய்தது. இதை 'குடி அரசு' வெளியிட்டு ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதியும் வாய்ப்பும் கிட்டவில்லை என்பதை பெரியார் ஊரறியச் செய்தார். 28-6-36 நாளிட்ட 'குடி அரசு' மகிழ்ச்சியூட்டும் செய்தி யொன்றை வெளியிடுகிறது. 'ஆம்பூர் இந்து உயர்நிலைப் பள்ளிக் குழுவினர், பள்ளியில் ஆதி திராவிடப் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ளுவதாக வாக்குறுதி கொடுத்ததற்காக, ஆம்பூர் கஸ்பா ஆதி திராவிட அபிவிருத்திச் சங்கம் நன்றியறிதலைச் செலுத்து கிறது. இப்பிள்ளைகளுக்கு பள்ளிக்கூட சம்பளம் இல்லாமல் சேர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளுகிறது.' அக்காலத்தில் ஆதி திராவிடர்களுக்குக்கூட முழு இலவசக் கல்வி கிடையாது. B கைவல்ய சாமியார் குடி அர' சில் பல்லாண்டுகாலம் வாரம் தவறாமல் 'அவியல்' என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி வந்தார். நல்ல தமிழ்ப் புலமையும் ஆழ்ந்த இந்து சமய அறிவும் பெற்றிருந்த அவருடைய எழுத்துக்கள் தமிழ் மக்களுக்கு விழிப் பூட்டின. 'குடி அர’சின் வீச்சு எவ்வளவு பரவலாக இருந்தது என்பதைக் காட்டும் அக்கால நிகழ்ச்சி ஒன்று இதோ: அவ்வமயம், ஈ. வே. ராவின் நண்பராகிய கோவை டி. ஏ. இராம லிங்கம் செட்டியார், ஈ. வே. ராவைக் காண நேர்ந்தது. டி.ஏ. இராமலிங்கனாருக்கு பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்தில் அக்கறை உண்டு. வே.ராவின் கை ஓங்க ஓங்க, பார்ப்பன ரல்லாதாரின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்பது அவருடைய அசையாத நம்பிக்கை. ஈ.வே.ராவின் செல்வாக்கு எவ்வகை யிலும் குறையக்கூடாது என்னும் ஆர்வத்தில், ஈ. 'அய்யா! இப்போதைக்கு பார்ப்பனீய எதிர்ப்போடு நிறுத்திக் கொள்ளுங்கள். கடவுள் நம்பிக்கை, சமய நம்பிக்கை முதலிய வற்றை எதிர்ப்பதை சிறிது காலத்திற்குத் தள்ளிப் போடுங்கள். பார்ப்பனீய எதிர்ப்பு வெற்றி பெறும்போது, மற்ற எதிர்ப்புகளைச் சேர்த்துக்கொள்ளலாம். "குடி அரசை அம் முறையில் நடத் தினால், பலரும் வாங்கிப் படிப்பார்கள். நானும் என்னால் ஆன உதவியைச் செய்கிறேன்' என்றார். 7
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/109
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை