நீதிக் கட்சி தலைமை 107 எங்கள் மாபெரும் தலைவரே! உங்கள் உடல் சிறைப்படுத்தப் பட்டிருந்தாலும் உங்கள் வீரத் திருவுருவத்தின்முன், நாங்கள் அனைவரும் எழுந்து நின்று ஒன்றுபட்டிருக்கிறோம். உங்கள் தலைமையில், நாங்கள் அனைவரும் சொல்வழிநின்று. கட்சி வளர, மக்கள் வாழ, குறிக்கோள் நிறைவேற, ஓயாது உழைத்து வெற்றிபெறுவோம் என உறுதி கூறுகிறோம்' என்று தமிழிலும் தெலுங்கிலும் உறுதி எடுத்தனர். கூற பகுத்தறிவுப் பெருஞ்சுனையாம் பெரியார் ஈ. வே. ராமசாமி, நீதிக் கட்சியின் 14ஆவது மாநாட்டுக்கு அனுப்பிய தலைமை உரை யில், 'உலக ஒற்றுமையை நான் வெறுப்பவனல்ல. உலக மக்கள் சமதர்ம வாழ்வை மேற்கொள்வதை வேண்டாமென்று வில்லை. மக்கள் யாவரும் விகிதாசாரம் உழைத்து அவ்வுழைப்பின் பயனை விகிதாசாரம் பகிர்ந்து, தத்தம் தகுதிக்கும் தேவைக்கும் அவசியமான அளவு அனுபவிப்பதை நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் தேசியம் என்றும் தேச சேவை என்றும் தேச பக்தி என்றும் தேச விடுதலை என்றும் தேச ஒற்றுமை என்றும் ஆத்மார்த்தம் என்றும் பிராப்தம் என்றும் பலபல சொற்களைக் காட்டி, மெய் வருந்தி பாடுபட்டுப் பொருளீட்டும் பொதுமக்களை, கட்டின ஆடை கசங்காமல், மெய்யில் வெய்யில் படாமல், வாழ்க்கை நடத்தும் ஒரு சிறு கூட்டத்தார் வஞ்சித்து, ஏமாற்றி,வயிறு வளர்ப் பதை, ஏன்? உழைப்பாளிகளைவிட அதிக சுகமான வாழ்வு வாழ் வதை அடியோடு ஒழிக்கவேண்டுமென்று சொல்லுகிறேன். . 'நம் நாட்டுத் தொழிலாளர்கள், பார்ப்பனரல்லாதார் இயக்கம் வேறு; தொழிலாளர்கள் வேறு என்று கருதிக்கொண்டிருக்கிறார் கள். இக் கருத்து மாறி, இரண்டும் ஒன்றுதான் என்ற உண்மை யான எண்ணமும் உணர்ச்சியும் ஏற்படும்வரை இரண்டும் உருப்படா என்பதே எனது அபிப்பிராயம். பார்ப்பனரல்லாத வர்கள் என்கிற வார்த்தையும் மக்களும் தொழிலாளர் என்ற வார்த் தையும் மக்களும் ஒன்றே என்பதை நாம் மறக்கவேகூடாது' என்று தெளிவுபடுத்தினார். மேலும், தமிழ்நாடு' தமிழருக்கேஎன்று ஏற்கெனவே 11-9-38இல் திருவல்லிக்கேணி கடற்கரையில், இந்தி எதிர்ப்புப் படை வரவேற்பு பொதுக் கூட்டத்தில் முதல் முதல் எழுப்பிய முழக்கத் தைத் தலைமையுரையாய் வலியுறுத்தினார். இம் முழக்கம் தென்னாட்டு மக்கள் அனைவரையும் அணைத்துக்கொள்ளும் வகையில் 1939இல் 'திராவிட நாடு திராவிடருக்கே' என்று உருப் பெற்றது. பெரியார் நீதிக் கட்சியின் தலைவராவதற்கு முன்பு அக்கட்சியின் அரசியல் குறிக்கோள் 'குடியேற்ற நாட்டு நிலைபெறுவது' என்ப
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/119
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை