108 புரட்சியாளர் பெரியார் தாக இருந்தது. அது, இந்த மாநாட்டில், முழுத் தன்னாட்சி பெறுவதே நோக்கம் என்று திருத்தப்பட்டது. உலகப் போர் பற்றி தந்தை பெரியார் தலைமையில் இயங்கிய நீதிக் கட்சி என்ன நிலை எடுத்தது? இட்லர் வெற்றி பெற்றால், அன்னிய ஆட்சிக் கொடுமை பன்மடங்கு அதிகமாகிவிடும். இந்தியா உள்ளிட்ட உலக நன்மையைக் கருதினால், இட்லர் தோற்க வேண்டும்; பிரிட்டன் வெல்லவேண்டும். இது பெரியாரின் தொலை நோக்கால் பிறந்த முடிவு; இதுவே கட்சியின் முடிவு. இரண்டாவது உலகப் போரின்போது பெரியார், நேசக் கட்சியை ஆதரித்தது, எவ்வித தன்னலம்பற்றியும் அல்ல. பெரியாருக்கு தென்னாட்டில் உள்ள பெரும் செல்வாக்கை உணர்ந்த ஆங்கில அரசு 1940இலும் 1942இலும் இருமுறை கவர்னர் ஜெனரல்களை யும் கவர்னர்களையும் அனுப்பி, சென்னை மாகாண ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்படி அவரை வேண்டிற்று. பெரியாரிடம் தனிப் பட்ட முறையில் நேசமும் மதிப்பும் கொண்டிருந்த இராச கோபாலாச்சாரியாரே நேரில் வந்து, ஆட்சிப் பொறுப்பை ஏற்கு மாறு பெரியாரைக் கேட்டுக்கொண்டார். தான் ஆதரவு கொடுப்ப தாகவும் கூறினார். பெரியார் பதவிப் பற்று அற்றவர். தான் ஏற்றுக்கொண்டுள்ள சமூக இழிவு ஒழிப்புப் பணிக்கு பதவி ஏற்பு இடையூறாகும் என்று கருதினார். மேலும் மற்றவர் தயவில், ஆட்சியில் இருக்க மனம் ஒப்பாதவர். எனவே, வலிய வந்த பதவியைப் புறக்கணித்துவிட்டார். ஆனாலும் ஆங்கிலேயருக்கு ஆதரவு தரும் முயற்சிகளில் ஈடு பட்டார். வழக்கம்போல் சமுதாய ஆதிக்கக் கூட்டம், பெரியார் மேல் வசைமாரி பொழிவதற்கு இம்முடிவை, சாக்காக்கிக் கொண்டது. எதையும் பொருட்படுத்தாது, உலகப் போரில் ஆங்கி லேயருக்கு ஆதரவு கொடுத்து வந்தார். 1940ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெரியார் ஈ.வே.ராமசாமி, வடநாட்டுச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அப்போது, 8-1-1940இல், முஸ்லீம் லீக் தலைவர் ஜனாப் முகமதலி ஜின்னா வைக் கண்டு உரையாடினார். அவரிடம் தாம் மேற்கொண்டுள்ள தனித் திராவிட நாடுகோரிக்கைபற்றி பெரியார் விளக்கிக் கூறினார். பின்னர், அதே ஆண்டு மார்ச்சு திங்களில் கூடிய முஸ்லீம் லீக் இஸ்லாமியர்களுக்குத் தனி நாடு வேண்டுமென்று கோரி முடிவு எடுத்தது. அதற்கு முன்பு, அது இஸ்லாமியக் கலாச்சார பாது காப்பு இயக்கமாகவும் பதவிகளில் நியாயமான விழுக்காட்டில் பங்கு கேட்கும் அரசியல் கட்சியாகவுமே இருந்தது. வட இந்தியாவில் ஜின்னா முஸ்லீம்களுக்குத் தனி நாடு கேட்டது போல், இங்கே, பெரியார், தென்னிந்தியர்களுக்காக, திராவிட
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/120
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை