பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிக் கட்சி தலைமை 109 நாடு கேட்டார். அதை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இணைந்த இந்தியாவில் இருக்கக்கூடியதைவிட பிரிந்த திராவிட நாட்டில் சமதர்ம முறை வெற்றிபெறுவதற்கும், சாதி ஏற்றத் தாழ்வு ஒழிவ தற்கும் ஆதரவான சூழ்நிலையும் வாய்ப்பும் அதிகமாக இருக்கும் என்பது பெரியாரின் மதிப்பீடு. இதைப்பற்றி சர் சி. பி. ராமசாமி அய்யர் வெளியிட்ட கருத் தினைக் காண்போம்: 'ஈ. வே. ராமசாமி அவர்கள் வெகுவாக மதிக்கப்படுகின்ற ஒரு பார்ப்பனரல்லாத தலைவர். இந்நாட்டின் பிறபகுதிகளிலிருந்து தமிழ் நாட்டைத் தனியாகப் பிரித்துவிட வேண்டுமென்பதை பகிரங்கமாகவே சொல்லி வருகிறார். இன்றைய நிலையை அடிப்படையாகக்கொண்டு பார்த்தால், பாகிஸ்தானத்தில் முதலமைச்சராக இருப்பதற்கு ஜின்னாவிற்கு எவ்வளவு உரிமை உண்டோ, அவ்வளவு உரிமை தமிழ்நாட்டின் தனி ஆட்சியில் ஈ. வே. ராமசாமி அவர்களுக்கு உண்டு.' 1940இல் திருவாரூரில் கூடிய நீதிக் கட்சியின் மாகாண மாநாட்டில், திராவிட நாட்டைப் பிரித்துக் கொடுக்கவேண்டும் என்று முறையாக முடிவுசெய்யப்பட்டது. அதுவே பல மாவட்ட, வட்ட மாநாட்டு முடிவுகளாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், ஜின்னாவின் குரலுக்குப் பின்னால் போதிய ஜனக்கட்டு இருந்தது. எனவே, ஜின்னா கேட்ட பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுக்க வேண்டியதாயிற்று. பெரியாரின் பின்னால், தெளிவும் போராட்ட குணமும் தியாகத் துடிப்பும் உள்ளவர்கள் நாட்டைப் பிரிப்பதற்கு வேண்டிய அளவுக்கு இல்லை. பெரியார் கேட்ட 'திராவிட நாடு' பலிக்கவில்லை. 4-8-1940 திருவாரூரில் கூடிய நீதிக் கட்சியின் மாகாண மாநாட்டின், முடிவுகளில் சில வருமாறு: ஆதி திராவிடர் சமுதாயத் திற்கு சர்க்காரால் அளிக்கப்பட்ட தனித் தொகுதி காப்புமுறை பூனா ஒப்பந்தத்தால் அழிக்கப்பட்டு, அச்சமுதாயத்துக்குச் சரி யான பிரதிநிதி வரமுடியாமல் செய்யப்பட்டுவிட்டதால், இனி வரும் தேர்தல்கள் யாவற்றிற்கும் தனித் தொகுதி முறையையே ஏற்படுத்தவேண்டுமென்று சர்க்காரைக் கேட்டுக்கொள்கிறது. ஆதி திராவிட மக்களுக்கு உரிமைகள் அளிக்கும் விஷயத்தில் மற்றும் உள்ள குறைகள் நீங்கும் விஷயத்திலும் அவர்களுக்குத் தக்க சலுகை காட்டவேண்டுமென்றும் இம் மாநாடு சர்க்காரைக் கேட்டுக்கொள்கிறது என்று முடிவுசெய்யப்பட்டது. தற்போதுள்ள வகுப்புவாரி பிரதிநிதித்துவ எண்ணிக்கை திராவிடர்களுக்கும் ஆதி திராவிடர்களுக்கும் மிகவும் குறைவாக