பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 புரட்சியாளர் பெரியார் இருப்பதால் மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப அவ்விகிதங்கள் ஏற் படுத்தப்பட வேண்டுமென்றும் அவ்விகிதப்படி உத்தியோகங்கள் அடையும்வரை அதிகமாகப் பிரதிநிதித்துவம் அடைந்திருக்கும் கூட்டத்தாருடைய நியமனம் நிறுத்திவைக்கப்பட வேண்டு மென்றும் சர்க்காரைக் கேட்டுக்கொள்ளுகிறது என்பது திருவாரூர் மாநாட்டின் மற்றொரு முடிவு ஆகும். தன்மான இயக்கமும் நீதிக் கட்சியும் பார்ப்பனர்கள், மற்ற வர்களை வேறாகக் கருதி நடத்துவதை மட்டும் கண்டிக்கவில்லை. எல்லா சாதி வேற்றுமைகளுக்கும் எதிராகப் போராடி வந்தன. திருவாரூர் நீதிக் கட்சி மாநாட்டில், 'ஆரிய சூழ்ச்சியாலும் ஆரிய சமய ஆதாரங்களாலும் திராவிட சமூகத்திடை நுழைக்கப்பட்ட சமுதாய உயர்வு - தாழ்வு வேற்றுமைகளை வேரோடு களைந் தெறிய வேண்டுமென்றும் திராவிடர்களுக்குள்ளாகவே இன்று காணப்படும் உயர்வு தாழ்வுகளும் நீக்கப்பட வேண்டுமென்றும் இந்த வேற்றுமைகளை ஒழிப்பதற்காக தக்க வழிகளை வகுத்துக் கையாளத் தகுந்த நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ள வேண்டு மெனவும் இம் மாநாடு வற்புறுத்தியது. மீண்டும் 27-8-44இல் சேலத்தில் பெரியார் ஈ. வே. ராமசாமியின் தலைமையில் நடந்த சேலம் மாநாட்டு முடிவுகளில், மக்கள் பிறவி யினால் சாதி பேதம் கற்பிக்கப்பட்டிருப்பதையும், அவற்றுள் உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டிருப்பதையும் இக் கழகம் மறுப்ப தோடு அவைகளை ஆதரிக்கிற, போதிக்கிற, கொண்டிருக்கிற மதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம், காவியம் என்பவை முதலாகிய எவையும் பொதுமக்களும், குறிப்பாக நம் கழகத்தவர் களும் பின்பற்றக் கூடாதென்று முடிவு செய்வதோடு அவைகள் நம் மீது சுமத்தப்படாமல் இருக்கவேண்டிய காரியம் தீவிரமாய்ச் செய்யவேண்டுமென்று இம் மாநாடு முடிவு செய்தது. திராவிடர் கழகம் பிறப்பு இந்த மாநாடானது. ஜஸ்டிஸ் கட்சி என்று அழைக்கப்படும் இக் கட்சிக்குள்ள தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரை "திராவிடர் கழகம்" என்று மாற்ற தீர்மானிக்கிறது' என்று சேலம் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. இப் பெயர் மாற்றம் 13-2-1944இல் சென்னையில் சி. என். அண்ணாதுரை தலைமை யில் நடந்த நீதிக் கட்சி மாநாட்டில் சேலம் மாநாட்டிற்கு பரிந் துரையாக முடிவு செய்யப்பட்டது.