பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 புரட்சியாளர் பெரியார் ஒழிக்கப்படும் வரை, சாதி வாரி பிரதிநிதித்துவ முறை அரசாங்க அலுவல்களில் நிரந்தரமாக இருந்து வரவேண்டுமென முடிவு எடுத்தார்கள். இப்போது நீதிக் கட்சி பெரியார் தலைமையில் எடுத்த அரசியல் சார்பான முடிவுகளைக் காண்போம்: பெரியாரும் அவருடைய தலைமையில் இயங்கிய நீதிக் கட்சியும் இரண்டாவது உலகப் போரில் பிரிட்டன் நேசக் கட்சிக்கு ஆதரவு தந்ததை முன்னரே குறிப்பிட்டோம். இது ஒருதலைக் காதலாக வளர்ந்தது. ஆங்கில அரசு, தங்களுக்குத் தொல்லைக் கொடுத்த வர்களைச் சரிகட்டுவதிலேயே அக்கறை காட்டிற்று. வருங்கால இந்திய அரசியல் அமைப்பைப்பற்றி, பிரிட்டிஷ் அரசுக்குப் பரிந்துரை கூற நியமிக்கப்பட்ட சர் ஸ்டாபோர்ட் கிரிப்சின் தலைமையிலான குழு, இந்தியாவிற்கு வந்தபோது, நீதிக் கட்சியின் தலைவர், பெரியார் ஈ. வே. ராமசாமி, அக்குழுவைக் கண்டு திராவிட நாடு பிரிவினையை வலியுறுத்தினார். ஆனால், கிரிப்சு, அதற்குரிய கவனத்தைச் செலுத்தவில்லை. மேற்கூறிய போக்கு, நீதிக் கட்சியினிடையே ஏமாற்றத்தை உண்டாக்கியது; அவர்களுடைய தன்மானத்திற்கு அறைகூவ லாகக் கருதப்பட்டது. எனவே 1944இல் நடந்த சேலம் மாநாட்டில், நீதிக் கட்சியினரின் உணர்வுகளைக் காட்டும் தீர்மானத்தை அறிஞர் அண்ணா கொண்டுவர, அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அம் முடிவின் சுருக்கம் வருமாறு: நம் சமுதாயத்தின் எதிர்கால நலனைக் கோரியும், நம் கட்சியின் தன்மானத்தைக் கருதியும் நமது கட்சியின் பேரால், இதுவரை நமக்கும் சர்க்காருக்கும் இருந்து வரும் போக்கை போக்கை மாற்றி அமைத்துக்கொள்ளவேண்டிய நிலைமைக்கு நாம் தள்ளிக் கொண்டு போகப்பட்டுவிட்டோம். இந்திய அரசியல், சமூக இயல், சம்பந்தமான பேச்சு வார்த்தை களில் சர்க்கார் நம் கட்சியையும் நம் இலட்சியமாகிய திராவிட நாட்டுப் பிரிவினையையும் அலட்சியம் செய்து வருகிறார்கள். நம் கட்சியிலிருக்கும் அங்கத்தினர்களும் இனியும் வந்து சேர இருக்கும் அங்கத்தினர்களும் சர்க்காரால் மக்களுக்கு அளிக்கப் பட்ட எந்தவிதமான கவுரவப் பட்டங்களையும் உடனே சர்க்காருக்கு வாபஸ் செய்துவிட வேண்டும்; இனி ஏற்றுக் கொள்ளவும் கூடாது. அதுபோலவே, அவர்கள் யுத்தத்திற்காகவும் மற்றும் சர்க்கார் காரியங்களுக்காகவும் மத்திய சர்க்காராலோ, மாகாண சர்க்கா