பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிக் கட்சி தலைமை 115 திருச்சி மாநாட்டில் 'கறுப்புச் சட்டைத் தொண்டர் படை' ஒன்று அமைப்பதென முடிவு எடுக்கப்பட்டது. அத்தகைய படையொன்று தமிழகமெங்கும் உருவாயிற்று. 1946ஆம் ஆண்டு மே திங்கள் 11ஆம் நாள் மதுரையில் கருஞ் சட்டைப் படை மாநாடு நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சிக்குப்பின், மாநாட்டுப் பந்தல் எதிரிகளின் தீயிடுதலுக்கு உள்ளாக்கப்பட்டது. இதுவும் திராவிடர் கழகத்தவர்களை அச்சுறுத்தவில்லை. வீறு கொண்டு பணியினைத் தொடர்ந்தார்கள். வெகுண்ட சுதந்திர ஆட்சி,2-3-48இல் கருஞ்சட்டைத் தொண்டர் படையைத் தடை செய்தது. 1948ஆம் ஆண்டு மே திங்கள் 8, 9 நாட்களில் தூத்துக்குடியில் திராவிடர் கழக மாகாண மாநாடு நடந்தது. இயக்க வரலாற்றில் குறிப்பிடத்தக்க அளவு மக்கள் வெள்ளம் பெருக்கெடுத்த மாநாடாக அது அமைந்தது. அம் மாநாட்டில், திராவிட நாட்டைத் தனி சுதந்திர நாடாக்குவதே, திராவிட மக்களின் முடிவான அரசியல் கோரிக்கை, என்பது வலியுறுத்தப் பட்டது. 9 இந்திய அரசியல் நிர்ணய சபை என்கிற பெயரால் தில்லியில் கூடியிருக்கும் சபை திராவிட மக்களின் பிரதிநிதித்துவம் பெற்ற தல்ல என்றும், திராவிட மக்களை எவ்வகையிலும் கட்டுப்படுத்தாது என்றும் இம் மாநாடு தீர்மானிக்கிறது. திராவிட நாட்டிலுள்ள பிரஞ்சுப் பகுதிகள், திராவிட நாட்டுப் பிரிவினை ஏற்படும்போது, திராவிட யூனியனில் சேர்த்துக் கொள்ளப்படவேண்டுமென்று, பிரஞ்சு இந்திய திராவிட மக்கள் 18ஆவது திராவிடர் கழக மாகாண மாநாட்டைக் கேட்டுக்கொள் கிறது என்று பிரஞ்சு இந்திய திராவிடர் கழகம் தெரிவித்துக்கொள் கிறதென்று வந்துள்ள செய்தியைக் கண்டு, இம் மாநாடு பிரஞ்சு இந்திய மக்களுக்கு நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறது. பெரும்பான்மை மக்கள் படித்திராத நாட்டில் ஜனநாயகம் நிலவுவது என்பது கூடாத காரியம் ஆதலாலும், படித்திராத மக்களுக்கு ஓட்டுரிமை அளிப்பது, வெறும் வேடிக்கைக் கூத்தாகவும் ஜனநாயகமென்பது, வெறும் கானலாகவும் இருக்குமென்றும் ஆகவே, திராவிட நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் கட்டாய ஆரம்பக் கல்வி அளிப்பதற்கான நடவடிக்கைகளை உடனே இந்திய யூனியன் அரசாங்கமும், மாகாண அரசியல் அதிகாரமும் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று இம் மாநாடு தீர்மானிக்கிறது என்பது எடுக்கப்பட்ட முடிவுகளில் ஒன்றாகும். சில தினங்களுக்குப் பிறகு, நடைபெற்ற ஈரோட்டு மாநாட்டில் தமிழ்நாட்டின் தொழில் வளம் வளர்ச்சி பெறமுடியாத நிலையில்