நீதிக் கட்சி தலைமை பார்ப்பனர்கள் 77 பேர்கள். 117 அதாவது, 25 விழுக்காட்டுக்குக் கிடைத்தது. எண்ணிக்கை அடிப்படையில் கிடைக்கவேண்டியதைப் போல் 9 பங்கு கிடைத்தது. இப்படி, அவர்கள் அதிகமாகப் பெறும் இடங்கள், யார் பங்கி லிருந்து எடுக்கப்படுகின்றன? பார்ப்பனரல்லாதார். தாழ்த்தப் பட்டோர், முஸ்லீம் ஆகியோரின் பங்குகளிலிருந்தே. அப்படியும் நிறைகொள்ளவில்லை பார்ப்பனர்கள். இதுவும் முழுமையாகச் செயல்பட முடியாதபடி செய்துவிட் டார்கள்! எப்படி? மருத்துவம், பொறியியல், சால்நடை மருத்துவம், பயிரியல், சட்டம், ஆசிரியப் பயிற்சி பயில்வதில் பார்ப்பனரல்லாதாரையும் தாழ்த்தப்பட்டவர்களையும் போதிய அளவு சேர்க்காமல் தட்டிக் கழித்தார்கள். எடுத்துக்காட்டாக, 1928-29ஆம் கல்வியாண்டில் மூன்று ஆதி திராவிட மாணவர்களே மாநிலக் கல்லூரியில் படித்தார்கள். ஆனால், அன்று அவர்கள் சமுதாயத்தில் பதினைந்து விழுக்காட்டினர் ஆவார். எனவே, தொழிற் கல்விக்கு மாணாக்கரைச் சேர்ப்பதிலும் வகுப்புரிமைப்படி ஒதுக்கும் ஆணை பிறந்தது. நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்தால்? சேலம் மாவட்டத்தில், 1944-45 இல் ஒரே ஒரு ஆசிரியர் பயிற்சிப் பள்ளி இருந்தது. அதற்கு நாற்பது பேர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் நான்கு இடம் 'தாழ்த்தப்பட்டோருக்கு' ஒதுக்கப் பட்டிருந்தது. 1942-43இலும், 1943-44இலும் ஆண்டுக்கு இரு தாழ்த்தப்பட்டவர்களே மனுப் போட்டிருந்தார்கள். கல்வி அதிகாரி 'சாது'வாகக் காட்டிக்கொண்டு, ஒவ்வோர் ஆண்டும் இரு மாணவர்களையும் ஏதோ நுணுக்கக் குறை சொல்லித் தள்ளிவிட் டார். இப்படியே எங்கும். அவர்களைச் சொல்லுவானேன்? நீதிக் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளான சாதி உயர்வு தாழ்வு உணர்ச்சியைப் போக்குதல், அது கைக்கூடும்வரை வகுப் புரிமைக்குப் பாடுபடல் ஆகிய இரண்டையும் நீதிக் கட்சித் தலைவர் பெரியார் கருத்தில்கொண்டு கடைசி மூச்சுவரை அவற்றின் வெற்றிக்காகப் பாடுபட்டு வந்தார். இவ்விரு இலட்சியங்களை அடைவதற்காகப் பெரியார் கோரிய திராவிட நாட்டுப் பிரிவினை முன்னேறாவிட்டாலும் சாதி இறுமாப்பு விரைந்து முனை மழுங்கி வருகிறது; வகுப்புரிமை பெருமளவு செயல்படுகிறது. சாதி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய பெரியார், மொழி ஆதிக்கத்தை எதிர்த்தும் அடுத்தடுத்துப் போராட நேர்ந்தது. அதில் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றார்.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/129
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை