பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்றைய சூழ்நிலை சாதிச் சேற்றிலே பூத்த எண்ணற்ற மக்களை, மானுட மாலை யாதத் தொடுத்துக் கொடுத்தளித்த பெரியார், பெரியாராகவே பிறந்தாரா? பால பருவத்தில் எந்த மகானுடைய அருளாசியாவது அவர்மீது பொழிந்ததா? இல்லை. இல்லை. எத்தனையோ சாதாரண பிள்ளைகளைப் போன்றே. ஈ.வே. ராமசாமியும் பிறந்தார். ஈரோட்டில் பிறந்தார்; எவர் வீட்டில் பிறந்தார்? வேங்கடப்பர் சின்னத்தாயம்மாள் வீட்டில் பிறந்தார். எப்போது பிறந்தார்? 1879ஆம் ஆண்டு செப்டம்பர் து திங்கள் 17ஆம் நாள் பிறந்தார். ஈ.வே. ராமசாமியின் தாய், சின்னத்தாயம்மாள் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தந்தை, வேங்கடப்பர் எளிய குடும்பத்தில் பிறந்தவர். தந்தை கூலிவேலை செய்யத்தொடங்கி, உழைப்பால், சிக்கனத்தால், படிப்படியாக உயர்ந்தார். மண்டிக் கடைக்கு உரியவராக வளர்ந்தார்; செல்வரானார். சமுதாயச் சூழல் ஒருவருடைய வளர்ச்சியின் போக்கு, அவர் வளரும் சமூக, அரசியல், பொருளியல் சூழ்நிலைகளைப் பெரிதும் சார்ந்திருக் கிறது. ஆகவே பெரியார் பிறந்த காலத்தில் நிலவிய சமுதாய அமைப்பை நோக்கினால், கோயில் இல்லாத ஊர் கிடையாது. கோயிலைச் சுற்றி பெரிய சாதி குடியிருப்பு. எட்டி இருப்பது சின்ன சாதி. ஊருக்கு அப்பால் இருப்பவர் நாட்டின் முதுகெலும்புகள் தாழ்த்தப்பட்டோர். 'என்னாலே ஆவதொன்றும் இல்லை' என்று ஆயிரம் ஆண்டு களாகக் கேட்டுக் கேட்டுப் பொதுமக்கள் நடைபிணங்களாக மாறிக் கிடந்தார்கள். 'இராமன் ஆண்டாலென்ன; இராவணன் ஆண்டா லென்ன' என்று தொடங்கிய பொறுப்பற்ற போக்கு, கையறு நிலை, ஆற்காட்டான் ஆண்டாலென்ன, ஒரக்காட்டான் ஆண்டா லென்ன என்னும் அலட்சியப் போக்காக விரிந்து, நம்மவன்