கட்டாய இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் . 7 1937ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்தது. அத்தேர்தலில், அன்றைய சென்னை மாகாணத்தில், காங்கிரசுக் கட்சி, பெரும் பான்மையான இடங்களைப் பிடித்தது. அமைச்சரவையை ஏற் படுத்தி, சென்னை மாகாணத்தை ஆட்சி செய்யும் பொறுப்பு, காங்கிரசின் கைக்கு வந்தது. சிறிது, 'பிகு' பண்ணிய பிறகு, திரு. சி.இராசகோபாலாச்சாரியார் பிரதமரானார். அவர் தலைமை யில் அமைச்சரவை இயங்கிவந்தது. முதல் காங்கிரசு அமைச்சரவை, தூங்கிக்கிடந்த தமிழர்களைத் தட்டி எழுப்பும் ஆணையொன்றை பிறப்பித்தது. அது என்ன? இந்தி திணிப்பு இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்கும் ஆணையை வெளியிட் டது. காங்கிரசு கட்சி ஆட்சி செய்த, பிற மாநிலங்களில், இந்தி கட்டாயமாக்கப்படவில்லை. அப்படியிருந்தும், சென்னை மாகா ணத்திற்குமட்டும் கட்டாய இந்தியை புகுத்த முனைந்தனர். எவ ருக்குக் கட்டாயம்? ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளில் படிக்கும் உயர்நிலைப் பள்ளி மாணாக்கருக்கு இந்தி கட்டாயப் பாடமாக்கப் பட்டது. இம்மொழியில் தேர்ச்சி பெற்றால்தான், கீழ் வகுப்பி லிருந்து மேல் வகுப்புக்குப் போகமுடியும் என்பது ஆணை. இது தேர்தல் அறிக்கையில் சொல்லிய திட்டமா? இல்லை. பொதுத் தேர்தலில் அறிவிக்காத இத்திட்டத்தைத் திணிப்பானேன்? . இந்தி மொழி, இந்திய ஒருமைப்பாட்டுக்குத் துணை செய்யும்; இந்திய அரசின் வேலைகளில் நுழைய உதவும்.' இப்படிச் சொல்லப் பட்டது. இது மாய்மாலம். ஆறு முதல் எட்டுவரை படித்து முடிப்போருக்கு அனைத்திந்திய வேலைகளில் அமரும் வாய்ப்புகள் அதிகமாக இருக்குமா? ஒன்பது முதல் பதினோராம் வகுப்புவரை படித்தவர்கள் அத்தகைய பணி களில் இடம்பெறுதல் அதிகமாக இருக்குமா? பட்டம் பெற்றவர்கள் இந்திய அரசின் அலுவல்களில் சேர்வது அதிகமாக இருக்குமா? மூன்று பிரிவுகளாக்கி சிந்தித்துப் பாருங்கள். அனைத்திந்திய
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/130
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை