பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டாய இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் 119 அரசின் ஊழியங்களில் சேரும் வாய்ப்பும் இந்தியைப் பயன்படுத்தும் வாய்ப்பும், மிகக் குறைவாகப் பெறக்கூடியவர்கள், எட்டாவ தோடு நின்றுவிடுபவர்களே. இதைக்கூடத் தெரிந்துகொள்ள முடியாத குழப்பவாதியா பிரதமர் இராசகோபாலாச்சாரியார்? இல்லவே இல்லை. தெரிந்திருந்தும் எவருக்கு இந்தி மொழி, மிக மிகக் குறைவாகப் பயன்படுமோ, அத்தகையோர் தலையில் இந்திச் சுமையை வைப்பானேன்? பொதுமக்களுடைய பிள்ளைகள், தொடக்கக் கல்வியோடு நின்றுபோகட்டும் என்னும் எண்ணமே, இந்தித் திணிப்பிற்குக் காரணம். அக்காலத்தில், கல்வி வளர்ச்சி, இன்றைக்கிருப்பதுபோல், பெரி தாக, இருந்ததா? இல்லை. தொடக்கப் பள்ளிகள்கூட இல்லாத சிற்றூர்கள் ஆயிரக்கணக்கில். உயர் தொடக்கப் பள்ளிகளின் இடைவெளி பல காதம். உயர் தொடக்கப் பள்ளிகள் அனைத்தும் அக்காலத்தில் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கவில்லை. கற்றுக் கொடுத்தாலும் ஆங்கிலத்தில் தேர்வுக்கு அனுப்புவதில்லை. ஆங்கிலத்தில் போதிய மதிப்பெண்கள் பெறத் தவறிவிட்டால். அது மொத்த தேர்ச்சியைக் குறைத்துவிடும். தேர்ச்சி குறையக் கூடாது என்பதற்காக மாணவர்களை ஆங்கிலம் தவிர பிற பாடங் களுக்கே தேர்வு எழுத வைப்பார்கள். உயர்நிலைப் பள்ளிக்கூடங்கள் நிறைய இருந்தனவா? இல்லை. சிறு நகரங்களில் ஒன்றிரண்டு; பெரு நகரங்களில் பல; ஆனால், நாட்டுப்புறங்களில் அரிதினும் அரிது. பல வட்டத் தலைநகர்களி லும் உயர்நிலைப் பள்ளி கிடையாது. உயர்நிலைப் பள்ளிப் படிப்பு, நகரத்தவர்கள் அனைவருக்குமாகிலும் கிடைத்ததா? இல்லை. ஏன்? அப்போது இலவசக் கல்வி இல்லை. அநேகமாக எல்லோருமே சம்பளம் கட்டிப் படிக்கவேண்டிய நிலை. எவருக்கும் முழுச் சம்பளத் தள்ளுபடி கிடையாது. எனவே, 1930களில், உயர் கல்வி என்பது அநேகமாக மேட்டுக் குடிகளின் கல்வியாகவே இருந் தது. அந்நிலையில் நாடார், வன்னியர், முக்குலத்தோர், ஆகியோ ரில் பலர், விழிப்படைந்து, தொழிலிலும் கல்வியிலும் முன்னேற முயன்றுகொண்டிருந்தார்கள். அவர்களும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியின்மேல் நாட்டஞ் செலுத்தியது புலனாயிற்று. ஏற்கனவே, பார்ப்பனரல்லாதாரில் மேல் படிக்கட்டுகளில் உள்ள வர்கள், கல்வி பெற்றுவிட்டுப் போராடி, பார்ப்பனரின் பதவி ஏக போகத்திற்கு ஓரளவு இடையூறாகிவிட்ட நிலை இராசகோபாலாச் சாரியாரின் நெஞ்சில் உறுத்திக்கொண்டிருந்தது. 'ஆறாம் வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கு இந்தியைக் கட்டாய பாடமாக்கி அதிலும் போதிய மதிப்பெண் பெற்றால்தான் தேர்வு