பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 புரட்சியாளர் பெரியார் என்று செய்துவிட்டால், சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பலர், 'எட்டாவதுவரைகூட எட்டிப் பார்க்கமாட்டார்கள். உயர் நிலைப் பள்ளி மாணாக்கர் எண்ணிக்கை பழையபடி மட்டமாகவே இருக்கும்; போட்டி அதிகம் ஆகாது.' இது அவர் நினைப்பு. திணிப்பின் பின்னணி பொதுமக்களின் பொதுக் கல்வி வளர்ச்சிக்குத் தடைபோடும் வழிகளில் ஒன்றாக, கட்டாய இந்தியை முதல் மூன்று படிவங்களில் திணிக்க ஆணையிட்டார். அதுபோக, இந்தியை எதிர்க்காமல் படிக்கமுயன்றால், பெரும்பாலான பார்ப்பனரல்லாத பிள்ளைகள் தோல்வி கண்டு, படிப்பை எட்டு வகுப்புக்குள் முடித்துக்கொள்ள நேரிடும். இந்தியை எதிர்த்தால், அது போராட்டமாக உருவாகும். அப் போது தன்மான இயக்கத்தின் கடவுள் மறுப்பு சாதியொழிப்புப் பணி குறையக்கூடும். அதோடு, உதய ஞாயிறாகக் கிளம்பிய சமதர்மத் திட்டத்தைப் பரப்புவதில் உள்ள முனைப்பு குறைய லாம். 'இந்தி எதிர்ப்பு' என்னும் சொற்றொடர், வட இந்திய சமதர்மவாதிகளையும் சாதி ஒழிப்பாளர்களையும் தென்னகத்து சமதர்மவாதிகளோடும் சாதி ஒழிப்பாளர்களோடும் சேரவொட்டா மல் பகையாக்கிவிடும். இவை மதிப்பீடு. இராசகோபாலாச்சாரியாரின் இந்தப் பின்னணியைப் புரிந்துகொண்டால்தான், சென்னை மாகாணத்திலும் தமிழ்நாட்டிலும் நடந்த, நடக்கிற, இந்தி எதிர்ப் பைப் புரிந்துகொள்ளமுடியும். பல்லாயிரம் ஆண்டு தற்குறித் தன்மைக்குப் பிறகு, ஊருக்கு இரண்டுபேர் உயர்நிலைப் பள்ளிகளுக்கு வருவதையே பொறுக்கா மல், அதைத் தங்கள் ஆதிக்கத்தை தகர்க்கக்கூடிய ஆபத்தாக எண்ணி, இந்தியை, சிறு பிள்ளைகளுக்குக் கட்டாயப் பாடமாக்கி னார்கள். ஈ.வே. ராமசாமி, 1926ஆம் ஆண்டு முதலே, இந்தியைத் தனி ஆட்சி மொழியாக்குவதை எதிர்த்துவந்தார். சி. இராசகோபாலாச் சாரியாரின் ஆணை தூங்கிக்கிடந்த தமிழர்களை தட்டி எழுப்பியது போல் ஆயிற்று. பண்டிதர்களும் சாதாரண மக்களை மதித்து, அவர்களோடு சேர்ந்து, கட்டாய இந்தியை, நடுநிலைப் பள்ளி கட்டாய இந்தியை எதிர்த்தார்கள். நாடு முழுவதும் கொந்தளிப்பு. நாளிதழ்களில் பல, கட்டுப்பாடாக, மக்கள் உணர்ச்சியை குறைத் துக் காட்டியும் மறைத்துவைத்தும், இந்தி எதிர்ப்பை அடக்க முடியவில்லை.