கட்டாய இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் 121 காஞ்சிபுரத்தில் முதல் மாநில இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது. இந்தியைக் கட்டாய பாடமாக்குவதை கைவிட்டுவிடும்படி வேண் டிக்கொள்ளும் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். ஆங்காங்கே தமிழர் மாநாடுகள் நடந்தன. கட்டாய இந்தியைக் கைவிடும்படி வேண்டுதல் தீர்மானங்கள் நிறைவேறின. அவற்றை ஆதரித்து எண்ணற்ற பொதுக்கூட்டங்கள், முடிவுகள், நடந்தவண்ணம் இருந்தன. ஆனால் அரசு அடம் பிடித்தது. முன்னர் அறிவித்தபடியே 1938-39ஆம் கல்வியாண்டில் 150 உயர்நிலைப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடத்தை நடைமுறைப்படுத்தியது. அடுத்து வரும் ஆண்டுகளில், மற்ற பள்ளிகளிலும் இந்தியைக் கட்டாயமாக்குவ தாகத் திட்டம். ஈ.வே. ராமசாமி இந்தி எதிர்ப்புப் போரை தொடங்கவேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார். அப்போது பிரதமர் என்றழைக்கப்பட்ட முதலமைச்சர் இராசகோபாலாச்சாரியார் வீட்டின்முன், தோழர் பல்லடம் பொன்னுசாமி என்பவர் கட்டாய இந்தியை எதிர்த்து உண்ணாவிரதம் தொடங்கினார். அவர் கைது செய்து தண்டிக்கப்பட்டார். திரு. ஸ்டாலின் ஜகதீசன் என்பவர், 'சாகும்வரை' உண்ணா நோன்பு தொடங்கினார். இதனால் இந்தி எதிர்ப்பு வலுவடைந்தது. ஆனால் பல நாட்களுக்குப் பிறகு, அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டார். இருப்பினும் இந்தி எதிர்ப்பு தணியவில்லை. சென்னையில் தியலாஜிகல் உயர்நிலைப் பள்ளியின் முன்பு ஒவ்வொரு நாளும் சில தொண்டர்கள், 'கட்டாய இந்தியை எதிர்த்து முழங்குவது' என்பது திட்டம். அந்த மறியல் தொடங் கிற்று; மறியல் தொண்டர்கள் நைது செய்யப்பட்டார்கள்; சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். அடக்குமுறை, வீறினை வளர்க் கும். இந்தி எதிர்ப்புப் போரில் அதையே கண்டோம். 'எப் பக்கம் வந்து புகுந்துவிடும்? இந்தி எத்தனை பட்டாளம் கூட்டி வரும்?' என்ற வீர முழக்கம் எங்கும் ஒலித்தது. . 'மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை' என்று ஆண்களோடு போட்டியிட்டுக்கொண்டு தாய்க் குலமும் மறியல் களத்தில் இறங்கியது. மாற்றான் முகம் பார்த்துப் பேசி அறியாத குடும்பப் பெண்கள், சில வேளை, தங்கள் மழலைகளோடு, மறியல் செய்து சிறைப்பட்ட காட்சி, நெஞ்சை உருக்கும் காட்சி. இந்திப் போரில் சிறைப்பட்டிருந்த தாலமுத்து, நடராசன் என்னும் இருவர் சிறையிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்ததும் தமிழ் மக்களுக்கு அச்சமூட்டவில்லை.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/133
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை