பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 புரட்சியாளர் பெரியார் இந் நிலையில் திருச்சியிலிருந்து நூறு பேர்கள்கொண்ட ஒரு இந்தி எதிர்ப்புப் படை புறப்பட்டு கால்நடையாக சென்னை நோக்கி வந்தது. 'நகர தூதன்' என்னும் அருமையான வார இதழின் ஆசிரியராக இருந்த மணவை ரே. திருமலைசாமி என்பவ ரால் அமைக்கப்பட்ட இப்படைக்கு இராவ் சாகிப் அய். குமார சாமி என்பவர் தலைமை தாங்கி வந்தார். திருமலைசாமி, பட்டுக் கோட்டை அழகிரிசாமி, திருப்பூர் மொய்தீன், பாலசுந்தரம் இராமாமிர்தத்தம்மையார் ஆகியோர் படையில் சேர்ந்து வந்தனர். வழி நெடுகிலும் பொதுக் கூட்டங்கள் நடத்தி, கட்டாய இந்தி யால் விளையக்கூடிய தீமைகளை எடுத்துரைத்தார்கள். தமிழ் மக்களுக்கு விழிப்பூட்டுவதில் இப் படை வெற்றி கண்டது. சென்னை வந்தடைந்த இப் படைக்கு, சென்னை கடற்கரையில் எழுபதாயிரம் மக்கள் கூடி வரவேற்பு அளித்தார்கள். அதுவரை அவ்வளவு பெரிய பொதுக் கூட்டத்தை சென்னை கண்ட தில்லை. தமிழ்நாடு தமிழருக்கே இந்தி திணிப்பு எதிர்ப்புக் கூட்டத்தில் பெரியார் வீர முழக்கம் செய்தபோது 'தமிழ்நாடு தமிழருக்கே' என்று முதன்முறையாக முழங்கினார். அதுவே தமிழர்களின் கொள்கையாகவும் நீதிக் கட்சியின் கொள்கையாகவும் பின்னர் திராவிடர் கழகக் கொள்கை யாகவும் ஆயிற்று. பல மாதங்களுக்குப் பிறகு, ஈ.வே. ராமசாமியும் நவம்பர் 1938இல் கைது செய்யப்பட்டார். குற்றஞ்சாட்டப்பட்டார்; பெண்களை இந்தி எதிர்ப்பு மறியல் செய்யத் தூண்டினார்' என்பது குற்றச்சாட்டு; அது சட்ட மீறலாகும் என்பது அரசின் வாதம். பெரியார் தண்டிக்கப்பட்டார்; சிறைக்கு அனுப்பப் பட்டார். இதோ வழக்கின் முடிவு: 'இவர் செய்த குற்றங்கள் இரண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோ ராண்டு கடுங்காவல்; ஒவ்வோராயிரம் ரூபாய் அபராதம்; அபராதம் செலுத்தாவிடில் மீண்டும் அவ்வாறு மாதம் தண்டனை. இரண்டு தண்டனைகளையும் இரண்டு தனித்தனி காலத்தில் அடையவேண்டும்.' பெரியார் காங்கிரசைவிட்டு விலகின, 1925இல் நடந்த, காஞ்சி புரம் மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய திரு. கலியாணசுந்தர னாரே, பின்னர், 1938ஆம் ஆண்டு பெரியார் இந்தி எதிர்ப்பிற்காக சிறைப்பட்டபோது, தமது 'நவசக்தி'யின் தலையங்கமாக நெஞ் சுருகி எழுதியதைப் பார்ப்போம்: