பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டாய இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் 125 சிறையில் தள்ளிப்பார்த்தது. இந்தி எதிர்ப்புப் போர் தணிய வில்லை. சிறையில் நோய்வாய்ப்பட்டிருந்த பெரியாரை திடீரென விடுதலை செய்ததைக் கண்டு தமிழர்கள் ஏமாறவில்லை. கட்டாய இந்தி பாடம் அடுத்த கல்வியாண்டிலும் தொடர்ந்ததால், போராட்டமும் தொடர வேண்டியதாயிற்று. அந்நிலையில் 1939 செப்டம்பரில் கொடுங்கோலன் இட்லர், இரண்டாவது உலகப் போரைத் தொடங்கிவிட்டான். பிரிட்டனின் பிரதமர், அம்மூர்க்கனை, சமாதானப்படுத்த, அடுத் தடுத்து முயன்றது வீணாகிவிட்டது. உலகப் போர் மூண்டதும், பிரிட்டிஷ் ஆட்சியால் இயக்கப்பட்ட இந்திய அரசு, இந்திய நாடும், இட்லருக்கு எதிராக, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நேசக் கூட்டுக்கு ஆதரவாக நிற்கும் என்று அறிவித்துவிட்டது. அப்போது பல இந்திய மாநிலங்களில், காங்கிரசு அமைச்சரவைகள் ஆட்சி நடத்தி வந்தன. இந்தியப் பொதுமக்களின் கருத்தறியாமல் தன்னிச்சையாக இந்திய அரசு பிரிட்டனுக்குப் போர் ஆதரவு அறிவித்ததை எதிர்த்து, காங்கிரசு அமைச்சரவைகள் பதவிகளை விட்டுவிடவேண்டும் என்று அனைத்திந்திய காங்கிரசு முடிவு செய்தது. அதையொட்டி, அதையொட்டி, சென்னை மாகாணத்தில், இராச கோபாலாச்சாரியார் அமைச்சரவை பதவியைத் துறந்தது. அது, நம்மைக் கட்டாய இந்தித் தொல்லையிலிருந்து விடுவித்தது. கட்டாய இந்திப் பாடத்தை எடுத்துவிட்டதாகவும் விரும்புகிற வர்கள் மட்டும் படிக்கலாமென்றும் ஆளுநர் ஆணை பிறப்பித்தார். . மீண்டும் இந்தி திணிப்பு 1947 ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா விடுதலை பெற்றது. அதை பெரியார் விடுதலையாக ஏற்றுக்கொள்ளவில்லை. ‘பொது மக்களுக்குக் கெடுதலையாகவே முடியும். தாழ்த்தப்பட்டவர் களும் பார்ப்பனரல்லாதாரும் தொடர்ந்து துன்பப்பட நேரிடும்' என்பது பெரியாரின் கருத்து. வெள்ளிப்பூண் பூட்டிய பழைய அடிமை விலங்கு மாற்றப்பட்டு, தங்கப்பூண் பூட்டிய புது விலங்கு பூட்டப்பட்டது' என்பது பெரியாரின் முடிவு. முப்பதாண்டு தன்னாட்சி நடைமுறை அதை மெய்ப்பித்துவிட்டது. C விடுதலை பெற்ற இந்தியாவில், 1948-49ஆம் கல்வியாண்டில் இந்திய அரசின் தூண்டுதலின் பேரில், மீண்டும் இந்தி கட்டாய பாடமாக நுழைந்தது. அதே நிலை மாணாக்கர் தலையில் திணிக்கப்பட்டது. உயர்நிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை எல்லா மாணாக்கரும் இந்தியைக் கட்டாயம் படிக்கவேண்டும்; போதிய மதிப்பெண்கள் பெற