126 புரட்சியாளர் பெரியார் வேண்டுமென்று மாகாண காங்கிரசு ஆட்சி ஆணையிட்டது. இது ஏட்டிக்குப் போட்டியாக, பந்தயம் போட்டுக்கொண்டு, கெட்டுப் போகும் நடவடிக்கையாகும். கட்சிக் கட்டுப்பாடு என்னும் பேராலே, இந்திய அரசியலில் விளைவித்த கொடுமைகளில் ஒன்று கட்டாய இந்தி பாடம். கட்டாய இந்தியை எதிர்க்காமல் இருக்க முடியுமா? இருந்தால், ஏழை எளியோர் பிள்ளைகள், ஐந்தாவது வகுப்புப் படிப்போடு முடங்கிக் கிடக்க அல்லவா நேரிடும்? எனவே மீண்டும் தமிழர்கள் போர் முரசு கொட்ட நேரிட்டது. தந்தை பெரியாரின் வழி காட்டலில் திரு. சி. என். அண்ணாதுரையை 'சர்வாதிகாரி' யாகக்கொண்டு, கட்டாய இந்தி பாட எதிர்ப்புப் போர் நடத்தப் பட்டது. ஏறத்தாழ ஈராண்டு காலம் போராடி, நூற்றுக்கணக் கானவர்களை சிறையில் வாடவிட்ட பிறகு, தமிழர்கள் ஓரளவு வெற்றி கண்டார்கள். இந்தியை ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளியிலும் கற்றுக் கொடுக்க வேண்டும்; விரும்புகிறவர்கள் படிக்கலாம்; விரும்பாதோர், இந்தி பாட நேரத்தில், மற்றொரு பள்ளிக்கூட நடவடிக்கையில் ஈடுபடலாம்' என்று அரசின் ஆணை மாற்றப்பட்டது. ஆனாலும் ஏறத்தாழ இரண்டு ஆண்டு களில் இந்தி திணிப்பு வேறு இடங்களில் தலைகாட்டிற்று. 1952 பொதுத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெற்று மத்திய ஆட்சி அமைத்த காங்கிரசு, இந்தி மொழியை பரப்புவதில் முனைப்புக் காட்டியது. இரயில்வே நிலையங்கள், அஞ்சல் நிலையங்கள், மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள், ஆகியவற்றின் பெயர்ப் பலகைகளில் இந்திக்கு மேலிடம் தரப்பட்டது. இதற்கு எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் தமிழகமெங்கும் உள்ள பெயர்ப் பலகைகளில் இந்திப் பெயரைத் தார்கொண்டு அழிக்கும் கிளர்ச்சியினை பெரியார் மேற்கொண்டார். 1952ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் தேதி நடந்த இக் கிளர்ச்சியில் பெரியாரோடு குத்தூசி குருசாமியும் பல்லாயிரக்கணக்கான திராவிடர் கழகத் தாரும் கலந்துகொண்டனர். அடுத்த ஆண்டு, அதே நாளில் அடையாள இந்தி பெயர் அழிப்பு நடந்தது. 1954 ஆகஸ்ட் முதல் நாளும் இத்தகைய கிளர்ச்சி நடந்தது. ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள், அமைதியான முறையில் பங்குகொண்டார்கள். அடுத்து அனைத்திந்திய கல்விக் கொள்கைகள் என்னும் பேரால், இந்தியை மீண்டும் தேர்வுப் பாடமாகத் திணிக்கும் சூழ் நிலை 1955இல் உருவாயிற்று. அதைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு, 17-7-1955இல் திருச்சியில் கூடிய, திராவிடர் கழக நிர்வாகக் குழு, தேசியக் கொடியை 1-8-55இல் எரிப்பதென்று
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/138
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை