பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 புரட்சியாளர் பெரியார் ஆண்டாலென்ன, வெள்ளையன் ஆண்டாலென்ன என்னும் அவல நிலைக்கு இந்திய மக்களைத் தள்ளிவைத்திருந்தது. காலகாலமாக, திதி என்றும் திவசம் என்றும் மணவிழாவென்றும் திருவிழாவென்றும் சொல்லி, பொதுமக்கள் கையில் கிடைத்த நாலு காசுகளையும் தட்டிக்கொண்டுபோன முறை அப்படியே இருந்தது. இதற்குமேல், இந்திய மன்னர்களோ, ஜமீந்தார்களோ ஈவு இரக்கமின்றி குடிமக்களிடம் எது எதற்கெல்லாமோ வரி விதித் தார்கள். மன்னன் மகளுக்குத் திருமணம். மண்ணாங்கட்டி கட்ட வேண்டியதோ கப்பம். அதற்கு மாற்றாகக் கிடைப்பதோ பட்டைச் சோறு. சிறு நிலமுடையோர் வாழும் ஊர்களில், அர்ச்சகரோ. கர்ணமோ, மணியமோ அவர்களைப் பிரித்துவைத்து, மோ தவிடுவ துண்டு. திருவிழாவில் முதல் பாக்கு வெற்றிலை யாருக்கு? இதற்காக நடந்த சண்டைகள் கணக்கில் அடங்கா. உடைந்த மண்டைகள் எண்ணற்றன. வற்றின குளத்திலே, நாலு பிடிக்க, முதல் வலை வீச, உரிமை எவருக்கு? இவ்வளவு பெரிய உரிமைக்கு, ஆண்டுக்கு ஆண்டு, அடிதடி நடத்தும் வீரத்திருவூர் பலப்பல. வழக்கு மன்றங்களில் காத்துக்கிடந்து, பாழாகும் மறத் தமிழர் எண்ணற்றோர். கல்லாமையிலும் இல்லாமையிலும் நோய்களிலும் வழக்குகளி லும் வாடிக்கிடந்த பொதுமக்களுக்குப் 'பிறர்' காட்டிய வழி என்ன? 'வஞ்சனை பேய்கள் என்பார்-இந்த மரத்தில் என்பார் அந்தக் குளத்தில் என்பார்.' 'பேய்களின் சேட்டையே, பிள்ளைக்கு இழுப்பு நோயாக வந்துள்ளது. அதன் ஆட்டமே, ஒருவர் மாற்றி ஒருவர் நோய்ப்பட்டுக் கிடப்பது' என்பார். இந்தப் பேயையும் அந்தப் பிசாசையும் எப்படிச் சமாளிக்க? மந்திரவாதிகளைக் கூப்பிடச் சொல்வார். மந்திர சூனியங்கள் குணப்படுத்தும் என்பார். இவ்வழியைப் பின்பற்று வார்கள், நம் மக்கள். ஆயுள் ஓமம், தாயத்துகள், மந்திரத் தகடுகள், அத்தனையும் கூட்டணியாகி, இந்தியர்களுக்குக் கொடுத்த ஆயுள் எவ்வளவு? இந் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்தியனின் சராசரி வயது பதினேழு. நம் முன்னோர்கள் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டுக் கிடந் தார்கள். அதோடு ஊர் குருக்களைக் கண்டு அச்சம்; கணக்கரைக் கண்டு நடுக்கம். வரி வாங்கியை (முன்சீப்)க் கண்டு பதைபதைப்பு. 'அப்பால் எவனோ செல்வான், அவன் ஆடையைக் கண்டு பயப் படுவார்.