பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 புரட்சியாளர் பெரியார் அரசாங்க முதல் மந்திரி திரு. காமராசர் அவர்களது அறிக்கையை பார்த்தேன். 'அவ்வறிக்கையானது நான் விரும்பியபடிமத்திய அரசாங்கத்திற்கு ஆகவும், சென்னை அரசாங்கத்திற்கு ஆகவும், வெளியிடப்பட்ட அறிக்கை என்ற பொருள் தரும்படியாக விடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து தமிழ்நாட்டவர்மீது இந்தி கட்டாயமாகத் திணிக்கப் படமாட்டாது என்று அரசாங்கம் வாக்குறுதி கொடுத்து கொடி யைக் கொளுத்தவேண்டாம் என்று விரும்புவதாக உணருகிறேன். ஆகவே நான், எனது தீர்மானம் அமுல் செய்யப்படாமல் இருக்க வேண்டும் என்று, சர்க்கார் விரும்பினால், எப்படிப்பட்ட வாக் குறுதி அளிக்கவேண்டுமென்று எதிர்பார்த்தேனோ அப்படிப்பட்ட வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. 'ஆனால் நடைமுறையில் இந்த வாக்குறுதியை அமுல் நடத்து வதில் அரசாங்கத்தாரால் இந்தி கட்டாயப்படுத்தப்படவில்லை என்பதாக மக்கள் தெளிவாகக் கருதும்படி நடந்துகொள்ளுமா அல்லது இவ்வளவு நாள் நடந்துகொண்ட மாதிரி ஒன்றுக்கொன்று (அறிக்கைக்கும் செய்கைக்கும்) சம்பந்தமில்லாத மாதிரி நடந்து கொள்ளுமா என்பதை நடைமுறையில் தெரிந்துகொள்ள வேண்டி யிருப்பதால், முதல் மந்திரியாரின் விருப்பத்திற்கு ஏற்ப கொடி கொளுத்துவதை தற்காலிகமாகவே ஒத்தி வைத்து, திராவிடர் கழகத்தாரையும், மற்றும் இதில் ஈடுபட இருக்கிற பொதுமக்களை யும் ஆகஸ்டு 1-ந் தேதியன்றைக்கு கொடியைக் கொளுத்தாமல் இருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன். கொடி எரிப்பைக் கைவிட்டார் பெரியார் ராமசாமி. சில ஆண்டுகளுக்குப் பிறகு, அனைத்து அரசியல் கட்சிகளின் ஒப்புதலோடு நடைமுறைக்கு வந்த புதிய கல்வித் திட்டத்தில் இந்தி பாடமொழியாக இருந்தபோதிலும் கட்டாய மொழியாக இல்லை; இந்தி படிக்க விரும்பாதோர் வேறொரு மொழியைப் படிக்கலாம் என்று மாற்றுக் கதவு திறக்கப்பட்டது. மூன்றாவது மொழி, தேர்வு மொழியாக இருந்தபோதிலும் தேர்ச்சிக்கு அதில் வாங்கும் மதிப்பெண்ணைக் கவனிக்கமாட்டோம் என்று மக்கள் உணர்ச்சியை மதித்த சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்தது. 1967இல் அறிஞர் அண்ணாதுரை தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக அமைச்சரவை அமைந்தது. தி.மு.க. ஆட்சி யில் பொதுமக்கள் - சிறப்பாக மாணவர்கள்-விருப்பத்தை யொட்டி, சென்னை சென்னை சட்ட சட்ட மன்றம் மூன்றாவது மொழிப் பாடத்தை உயர்நிலைப் பள்ளிகளில் கைவிட முடிவுசெய்தது.