பெண்ணுரிமைப் பணி 133 அந்த விதவைக் குழந்தை, பூப்படைந்தது. அப்பெண்ணைத் திருமணஞ் செய்துகொள்ள, ஓர் இளைஞனை ஏற்பாடு செய்தார். மாருக்கும் தெரியாமல், தன் மைத்துனர், அப்பெண், நம்பிக்கை யுள்ள ஓர் அம்மையார் ஆகிய மூவரையும் சிதம்பரத்திற்கு அனுப்பிவைத்தார். திருமணஞ் செய்துகொள்ள இசைந்த இளைஞனை அச்சகத்திற்குப் பொருள்கள் வாங்கும் சாக்கில், சென்னைக்கு அனுப்பிவைத்தார். அவர் அவர் சென்னையிலிருந்து சிதம்பரம் போய்ச் சேரவேண்டுமென்பது ஏற்பாடு. F. Gal. ராமசாமியோ, அப்போது, அப்போது, ஈரோட்டிலேயே ஈரோட்டிலேயே தங்கிவிட்டார். எனவே, யாரும் எவ்வித அய்யமும் கொள்ளவில்லை. முன்னேற்பாட்டின்படி, சிதம்பரத்தில் இருந்த, ஈ. வே. ராமசாமி யின் நண்பர் இல்லத்தில் திருமணம் நடந்தது. அந்த நண்பர், அங்கு, காவல் துறை ஆய்வாளராக இருந்தார். எனவே, பல பெரிய மனிதர்கள், அத்திருமணத்திற்கு வந்தார்கள். மணமக்கள், ஈரோட்டுக்கு வந்தபோது, அவர்களை வரவேற்க ஈ. வே. ராமசாமி, புகைவண்டி நிலையத்திற்குச் சென்றார். ஊரில் இச்செய்தி, காட்டுத் தீபோல் பரவிற்று. ஈ. வே. ராமசாமியின் தந்தை, 'பெரிய அவமானம்' வந்துவிட்ட தாக எண்ணி,தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டார். ஈ. வே. ராவின் தாயார், சின்னத்தாய் அம்மாளோ, தூக்கில் தொங்கவே போய்விட்டார்கள். இந்நிலையில் உறவினர்கள் கூடினார்கள்; மூன்று வீட்டாரை, ஆறு ஆண்டுகளுக்கு சாதியிலிருந்து தள்ளி வைப்பதாக ஒருமனதாக முடிவு எடுத்தார்கள். உறவினர்கள் ஈ.வே. ராமசாமியின் குடும்பத்தோடு தொடர்பினை விலக்கிக் கொண்டார்கள். தொடர்பு மீண்டும் வந்ததா? வந்தது. எப்போது? ஈ. வே. ராமசாமி, ஈரோடு நகராட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டபோது. தேர்தல் முடிவு தெரிந்ததும் பல்வேறு சாதியாரும் ஈ.வே. ராமசாமியார் வீட்டிற்கு சீர்வரிசைகளோடு வந்து பாராட்டினர். ஈ.வே. ராமசாமியின் உறவினர் இரண்டொருவர், 'நம்ம சாதிக் காரர் நகராட்சித் தலைவராக உள்ளார். யார் யாரோ பாராட்டி விட்டு வரும்போது, நாம் மட்டும் சும்மாவிருக்கலாமா?' என்று எண்ணி, ஈ.வே. ராமசாமியைப் பாராட்ட வந்தார்கள். அவர் களுக்கு, ஈ. வே. ரா. வீட்டில் காப்பி கொடுத்தார்கள்; அதை மறுக்காமல், உறவினர்கள் அருந்தினார்கள். அடுத்து பல உறவினர் களும் வந்து பாராட்டிவிட்டு, காப்பி அருந்திச் சென்றார்கள். இப்படித்தான் உறவினர் விலக்கம் ஒடிந்தது.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/145
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை