134 புரட்சியாளர் பெரியார் பழமைப் பாறையாகிவிட்ட நம் சமுதாயத்தில், இச்சிறு மாற்றத் திற்காக எத்தனை தொல்லைகளைத் தாங்க வேண்டியிருந்தது பாருங்கள். அத்தகைய தியாகத்திற்கு துணியாவிட்டால் சமுதாய மாற்றம் பெயரளவோடு நிற்குமென்பதை இளைஞர்களுக்கு நினை வூட்டல் என் கடமையாகிறது. விதவைகள் படும் துயரத்தைத் துடைக்கப்பாடுபட்ட பெரியார். தன் உறவினராகிய விதவைப் பெண்ணுக்குத் திருமணஞ்செய்து வைத்ததை மேலே கண்டோம். குழந்தை மணத்தை எதிர்த்து, பெரியாரின் தன்மான இயக்கம், தொடக்க காலம் முதல் குரல் எழுப்பியது. குழந்தை மணம் சட்டத்தின்மூலம் தடை செய்யப் படும்வரை ஒவ்வொரு மாநாட்டிலும் குழந்தை மணத்தை எதிர்த்து தீர்மானம் போடப்பட்டது. பெண்ணுரிமை கோரிக்கை எடுத்துக்காட்டாக, செங்கற்பட்டு, முதல் சுயமரியாதை மாநாட்டில், '16 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கே மணம் செய்விக்கப்படவேண்டுமென்றும், பெண் விதவைகளுக்கு மறுமண உரிமை தேவையென்றும், பெண்களுக்கு மணவிலக்கு உரிமை வேண்டுமென்றும்' செய்யப்பட்ட முடிவு அக் காலகட்டத்தில் புரட்சிகரமானது ஆகும். பெண்களுக்கு ஆண்களைப்போலவே சமமாக, சொத்துரிமை களும் வாரிசு பாத்தியதைகளும் கொடுக்கப்பட வேண்டுமென்றும், பெண்களும் ஆண்களைப்போலவே, எந்தத் தொழிலையும் நடத்திவருவதற்கு அவர்களுக்கு சம உரிமையும் வாய்ப்பும் கொடுக்கப்படவேண்டுமென்றும், 'பள்ளிக்கூட ஆசிரியர்கள் வேலையில் பெண்களே அதிகமாக நியமிக்கப்படுவதற்கு தக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும், தொடக்கக் கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் வேலைக்குப் பெண் களையே நியமிக்க வேண்டுமென்றும்' முடிவு செய்யப்பட்டது. 10-5-1930இல் ஈரோடு சுயமரியாதை பொது மாநாட்டில், 'ஆண். களைப் போன்று, பெண்களுக்கும் சொத்து உரிமை, வாரிசு உரிமை ஆகியவைகளில் சம உரிமை இருக்கவேண்டுமென்றும் எந்தத் தொழிலிலும் ஈடுபடவும் அதைக் கையாளவும் சம உரிமை இருக்க வேண்டுமென்றும் குறிப்பாக தொடக்கக் கல்வி ஆசிரியர்களாக அவர்களை அதிகமாக நியமிக்கவேண்டுமென்றும் முடிவு செய்யப் பட்டது. பொது மாநாட்டை ஒட்டி நடந்த மாதர் மாநாட்டிலும், 'சொத்தில் உரிமை பாத்தியம், குழந்தைகளுக்குக் கார்டியன்
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/146
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை