136 புரட்சியாளர் பெரியார் தேடவில்லை. இந்தியாவிலும் பிற சமயங்களில் இல்லாத அநீதி, கேவலம், அநாகரீகம், இந்து சமயத்தின்பேரால், இந்து வாழ்க்கை முறையின் இன்றியமையாத பகுதியாக, இருந்து வந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஒழுக்கத்தில் நாட்டமுடையவர்கள், காறி உமிழ்ந்து, போராடி ஒழித்திருக்கவேண்டிய இந்து 'பேடன்ட்' முறைக்குப் பெயர், பொட்டுக் கட்டுதல். அப்படியென்றால்? புத்தி தெரியாப் பருவத்தே, சிறுமி ஒருத்தியை உள்ளூர் அல்லது பக்கத்து ஊர் கோயிலுக்கு 'அடியாளாக'ப் பொட்டுக் கட்டி விடுவது. சாமிக்குப் பொட்டுக் கட்டிவிடப்பட்ட அவள், பின்னர் யாரையும் திருமணஞ் செய்துகொள்ளக்கூடாது. கோயில் பணி விடைகளில் ஈடுபட வேண்டும். இசை நாட்டியம் முதலியவை களைக் கற்று, கோயில் திருவிழாக் காலங்களில் பாடியும் ஆடியும் ஆண்டவன் தொண்டைச் செய்யவேண்டும். அதனால் சாமி மகிழ்ந்ததாக, மானுடன் எவனுக்கும் தகவல் இல்லை. . ஆனால் ஆசாமிகள் மகிழ்ந்ததாகக் மகிழ்ந்ததாகக் கேள்வி. பாடியவள் வீட்டுக்கு, ஆடியவள் வீட்டுக்குப் போவதில், பெரும் பண்ணையா ருக்கும் சின்ன பண்ணையாருக்கும் போட்டி மூண்டது தெரியும். துணிக் கடைக்காரர்களுக்கும் நகைக் கடைக்காரர்களுக்கும் போட்டி பெருகியதை அறிவோம். இப்போட்டிகள், அவர்களுக் குள் தீராத பகையானதோடு நிற்காமல், உள்ளாட்சி அரசியல் சண்டைகளுக்கும் குழப்பங்களுக்கும் கவிழ்ப்புகளுக்கும் காரணமா யிருந்தது ஏராளம். கட்டிவிடப்பட்ட தேவர்க்கு அடியார்களாகப் பொட்டுக் பரிதாபத்திற்குரியவர்கள் யார்? ஆயிரம் சாதிகள் கொண்ட நம் சமுதாயத்தில், சாதிக்கு ஐந்து பேர்களையோ பத்துக் கன்னி களையோ, இப்படிக் காணிக்கை ஆக்கிவிட்டார்களா? இல்லை. இந்த அவமானத்திற்கு, இழிவிற்கு, கொடுமைக்கு, உட்பட வேண்டிய சாதி, தனியாக ஒன்று இருந்தது. நாட்டிலுள்ள கயவர் களுக்கெல்லாம் போக்கிடமாக வேண்டிய மாதர்கள், தனிச்சாதி யைச் சேர்ந்தவர்கள். இம்முறைப்படி, ஒவ்வோர் கோயிலுக்கும் சில பல பொட்டு கட்டிய, அதாவது, பொது மகளிர் இருந்தார்கள். இந்த இழிவைப்பற்றி எந்த ஒழுக்கசீலனும் பொங்கி எழவில்லை. எந்த மகானும் 'வேண்டுதல் வேண்டாமை இலாத நிர்மலனோடு இந்த அசிங்கத்தை இணைக்காதே' என்று அருளுரை வழங்க வில்லை. போராட்டம் நடத்தவில்லை. ஏன்? நம் ஆண்கள் யோக்கி யுதை அவ்வளவு கெட்டுக்கிடந்ததுபோலும்! இப்போதைக்கில்லா விட்டால், எப்போதைக்காகிலும் பயன்படாதா என்று எண்ணி னார்களோ என்னவோ? சமய முத்திரையோடு புனிதத் தன்மை என்னும் வெண்குடையின்கீழ், பட்டிமாட்டு ஆண்களின் கொழுப்
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/148
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை