அன்றைய சூழ்நிலை "தந்த பொருளைக் கொண்டே - ஜனம் தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம் அந்த அரசியலை-இவர் அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார்.' 9 ஏன் இந்த நிலைக்கு வீழ்ந்தார்கள்? அறியாமை, மூடநம்பிக்கை ஆட்சிசெலுத்தியதால்; அதோடு இங்கே, ஒன்றுபட்ட சமுதாயம் இல்லை. பின் என்ன இருந்தது? 'வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி பேர்கள் என்றால் சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும் இங்கே அவரவரும் தனித்தனிதான்.' அன்று மட்டுமா நாம் நெல்லிக்காய் மூட்டைகள்? இன்றுந்தான். என்றைக்குத் தொலையும் இந்நிலை? எனக்கு ஆருடம் தெரியாது. அதை நான் நம்புவதுமில்லை. ஒன்றுபட்ட இந்தியச் சமுதாயந்தான் இல்லை. தொலையட்டும். ஒன்றுபட்ட தமிழ்ச் சமுதாயமாகிலும் உண்டா? இல்லை. நம் உடன்பிறப்புக்களாகிய ஆந்திரர்களாகிலும் ஒரே சமுதாயமாகக் காட்சியளித்தார்களா? இல்லை; இல்லை. ஏன்? தமிழ் மக்களைக்கொண்டு ஆய்வோம். நம் நிலையென்ன? சாதிப் பாகுபாடு நாங்கள் தொண்டை நாட்டார் என்று மார்தட்டுவோர் அதிகமா? தமிழர் என்று தலை நிமிர்ந்து நிற்போர் அதிகமா? தொண்டை நாட்டார் என்போரே அதிகம். அவர்களில் தமிழரை, காட்டில் கலாப்பழம் தேடுவதுபோல் தேடிக் காணவேண்டும். தென்பாண்டி நாட்டார், என்று சொல்லிக்கொள்வதிலே பூரிப் படைகிற அளவு தமிழர் என்று முழங்குவதிலே பெருமிதம் கொள் வோர் அதிகமா? இல்லை. பாண்டி நாட்டார், என்று பிரித்துக் கொள்வோரே ஏராளம். எங்கள் கொங்குச் சீமை என்று கொக்கரிப்போருக்குக் குறைவேது? சோழ நாட்டார் மட்டும் சும்மா இருப்பார்களா? சோழவள நாட்டார்; கடாரங்கண்ட பெருநாட் டார், என்றே முழங்குவார்கள். நான்கு நாட்டார் பேசுவதும் தமிழ். ஆயினும், தமிழர் என்னும் உணர்வை ஆழப் புதைத்து விட்டு, நான்காகப் பிரித்து நினைப்பதல்லவா நம் சிந்தனை ஓட்ட மாக இருக்கிறது? தமிழர் அனைவரையும் ஒன்றாக்கும் உணர்வைப் புதைத்த, பிராந்திய உணர்வாகிலும் உயிர்த் துடிப்போடு, அப்பகுதிவாழ்
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/15
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை