பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 புரட்சியாளர் பெரியார் விபசாரித்தனத்திற்குச் செல்வாக்கும் மதிப்பும் சமய சமூக முக்கிய ஸ்தானங்களில் தாராளமாய் இடமும் அளித்துவரும் ஒரு கெட்ட வழக்கம், நமது நாட்டில் வெகு காலமாய் இருந்து வருகின்றது. அன்றியும் நாளாவட்டத்தில் இது ஒரு வகுப்பிற்கே உரியது என்ப தாகி, இயற்கையுடன் கலந்த ஒரு தள்ளமுடியாத கெடுதியாய் இந்த நாட்டில் நிலைபெற்றும் விட்டது. ஒரு நாட்டில் நாகரீகமுள்ள அரசாங்கமாவது அல்லது நாட்டின் சுயமரியாதையையோ, குடிமக்க ளின் ஒழுக்கத்தையோ நலத்தையோ கோரின் அரசாங்கமாகவாவது ஒன்றிருந்தால் இந்த இழிவான கெட்ட பழக்கம் கடவுள் பேராலும், மதத்தின் பேராலும், சமூகத்தின் பேராலும், தேசிய வழக்கத்தின் பேராலும் இருந்துவர ஒரு கணநேரமும் விட்டுக்கொண்டு வந்திருக் காது என்றே சொல்வோம்' என்று சாடினார். திருமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் கொண்டுவந்த மசோதா, வைதிகர்களின் சலசலப்பைப் பொருட்படுத்தாது, சட்ட மாக்கப்பட்டது. அது செயல் முறைக்கும் வந்தது. அதன் விளை வாக, இந்த அவமானம் ஒழிந்ததோடு, அநீதிக்கு ஆளான அச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இழிவிலிருந்து விடுபட்டு, கல்வி கற்று, மற்ற சமூகங்களைப்போன்ற நிலைக்கும் மதிப்பிற்கும் வளர்ந்து வந்துவிட்டார்கள். ஆண் பெண் ஏற்றத்தாழ்வு . சாதி ஏற்றத்தாழ்வைவிட ஆழமாகவும் அகலமாகவும் பரவி யிருப்பது ஆண் பெண் ஏற்றத்தாழ்வாகும். இருவகை ஏற்றத் தாழ்வும் விரைந்து ஒழிக்கப்படவேண்டும். சாதி ஏற்றத்தாழ்வை ஒழிப்பது காட்டாற்றில் எதிர்நீச்சல் போடுவதுபோலாகும். ஆண் பெண் சமத்துவத்தை அடைவது, நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போடுவதற்கு ஒப்பாகும். எனவே, இதுபற்றி பெரியாரின் கருத்து களைப் படிப்போம், சிந்திப்போம், கற்றபடி நிற்போமாக. பெரியார், பெண்ணின், பெருமைபற்றி 'பெண்கள் மனித சமுதா யத்தில் சரி பகுதி எண்ணிக்கைகொண்டவர்கள். இரண்டொரு உறுப்பில் மாற்றம் அல்லாமல், மற்றபடி பெண்கள் மனித சமுதாயத்தில் ஆண்களுக்கு முழு ஒப்பும் உவமையும் கொண்ட வர்கள் ஆவார்கள் என்பேன். அவர்களால் வீட்டிற்கு, சமுதாயத் திற்குப் பயன் என்ன? எங்கே கெட்டபேர் வந்துவிடுகிறதோ என்பதுதானே? இன்று பெண்கள் வேலை என்ன? ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணாய் அமைவது. அது எதற்கு? ஆணின் நலத்திற்குப் பயன்படுவதற்கும், ஆணின் திருப்திக்கும், ஆணின் பெருமைக்கும் பெண் ஓர் உபகருவி என்பதல்லாமல் வேறு என்ன? ஓர் ஆணுக்கு