பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 புரட்சியாளர் பெரியார் ஆண்கள் பெண்களை நடத்தும் முறைபற்றி 'பெண் மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது, மேல்சாதிக்காரன் கீழ்சாதிக்காரனை நடத்துவதைவிட, பணக்காரன் ஏழையை நடத்துவதைவிட, எசமான் அடிமையை நடத்துவதைவிட மோச மானதாகும். ஆண்கள் பெண்களை பிறவிமுதல் சாகும்வரை அடிமையாயும் கொடுமையாயும் நடத்துகின்றார்கள்' என்று பெரியார் படம் பிடித்துக்காட்டி 'தனி உரிமை உலகில், பெண்கள் உரிமை வேண்டுமென்பவர்கள், பெண்களை நன்றாய்ப் படிக்க வைக்கவேண்டும். தங்கள் ஆண் பிள்ளைகளை இலட்சியம் செய்யாமல், பெண்களுக்கே செலவு செய்து படிக்கவைக்க வேண்டும். வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு தொழில் கற்றுக்கொடுக்க வேண்டும்' என்று அறிவுறுத்தினார். மேலும் அவர் கூறுவதாவது: 'இது என்ன நியாயம்? மனித சமுதாயம் தவிர மற்றபடி மிருகம், பட்சி, பூச்சி முதலியவைகளில் வேறு எந்த உயிராவது, "ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம்" என்ற கருத்துடன், நடத்தையுடன் இருக்கிறதா? 'இந்த இழிநிலை பெண்களுக்கு அவமானமாய்த் தோன்ற வில்லை என்பதற்காகவே, ஆண்கள் பெண்களை இவ்வளவு அட்டூழியமாக நடத்தலாமா என்று கேட்கிறேன். ஓர் ஆண் ஒரு பெண்ணைத் தனது சொத்து என்று எண்ணுகிறானே-எதனால்? துணியாலும் நகையாலும் தானே! 'நான் பாமர மக்களை மாத்திரம் சொல்லவில்லை. நம் அறிஞர், செல்வர்,தனக்கென தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர் ஆனவர்கள் என்று சொல்லப்படும் பெரியார்களின் யோக்கியதைகளையும், அவர்கள் பெண்கள் உலகத்துக்கு ஆற்றும் தொண்டுகளைப் பற்றியுமே சொல்லுகிறேன். திராவிடப் பேரறிஞர்களின் மனைவிகள், தங்கை, தமக்கைகள், பெண்கள் எப்படிப் பிறந்தார்கள்? எப்படி வளர்ந்தார்கள்? எப்படித் தகுதி ஆக்கினார்கள்? எப்படி இருக்கிறார்கள்? நகைக் கடைகள், துணிக்கடைகள், ஆகியவற்றில் விளம்பரத்திற்கு வைத் திருக்கும் அழகிய பொம்மைகள் உருவங்கள்போலல்லாமல்-நாட் டுக்கு மனித சமுதாயத்திற்கு பெண்கள் உலகத்திற்கு இவர்கள் என்ன மாதிரியில் தொண்டாற்ற அல்லது தாங்களாவது ஒரு புகழோ, கீர்த்தியோ பெறத்தக்கபடி வைத்தார்களா? இவர்களே இப்படி இருந்தால்-மற்ற பாமர மக்கள், தங்கப்பெட்டியின் உள்ளே, வெல்வெட் மெத்தைபோட்டுப் பூட்டித்தானே வைப்பார்கள் ! 'நம் பெண்கள் நகைகள் மாட்டும் ஸ்டாண்டா? இந்தப் பிரபல ஆண்கள் பிறந்த வயிற்றில்தான் இவர்கள் தங்கை, தமக்கையர்