பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்ணுரிமைப் பணி 141 பிறந்தார்கள். இவர்கள் தகப்பன்மார்கள்தான்-அவர்களுக்கும் தகப்பன்மார்கள். அப்படி இருக்க, இவர்களுக்கு இருக்கும் புத்தி, திறமை அவர்களுக்கு ஏன் இல்லாமல் போகும்? இதைப் பயன் படுத்தாதது நாட்டுக்கு, சமூகத்திற்கு நட்டமா இல்லையா? 'நகைக்கும் துணிக்கும் போடும் பணத்தை பாங்கியில் போட்டு குறைந்த வட்டியாவது வாங்கி, குழந்தை பிறந்தவுடன் அதை எடுக்க, அந்த வட்டியில் ஓர் ஆள் வைத்தாவது அதைப் பார்த்துக் கொள்ளச் செய்தால், அன்பு குறைந்துவிடுமா? பெற்ற தகப்பன் குழந்தையைத் தன்னுடன் வைத்துத்தானா அழகு பார்க்கிறான்? அன்பு காட்டுகிறான்? கொஞ்சி விளையாடுகின் றான். ஆகையால், குழந்தையை ஆட்கள் மூலம் வளர்க்கவேண்டும். சமையல் ஆட்கள் மூலம் செய்விக்கவேண்டும். பெண்கள் ஆண்களைப்போல் உயர் வேலை பார்க்கவேண்டும். பொம்மைகளாக நகை மாட்டும் ஸ்டாண்டுகளாகக் கூடாது என்கிறேன். 'ஆண்கள் பார்க்கும் எல்லா வேலைகளையும் தொண்டுகளையும் பெண்கள் பார்த்துச் செய்யமுடியும் என்பேன். ஆனால் நகைப் பித்து, துணி அலங்காரப் பித்து, அணிந்துகொண்டு சாயல் நடை நடக்கும் அடிமை, இழிவு, சுயமரியாதை அற்ற தன்மைப் பித்து ஒழியவேண்டும். இப்படிப் பெரியார் பெண்கள் விடுதலைக்கு வழிகாட்டினார். ஒருவருக்கோ ஒரு கூட்டத்துக்கோ விடுதலை கொடுக்கிறோம் என்றால் அவரையோ அக்கூட்டத்தையோ அதற்குத் தகுதியாக்கு தல் முதற்கடமையாகிறது. பாரதிதாசன் கேட்டதுபோல் 'கண் திறக்காதபோது, விடுதலை வாழ்வின் கதவு திறந்தால் பயன் ஏது?” களைய வேண்டியவற்றைச் சுட்டிக்காட்டிய பெரியார், வளர்க்கவேண்டியவற்றைக் கோடிட்டுக்காட்டத் தவறவில்லை. இதோ பெரியார் உரை: 'ஒன்று, இரண்டு, மூன்றுகூட எண்ணத்தெரியாத நிலையில் உள்ள பெண்களைக் கட்டிக்கொண்டு, அவர்களுக்குச் சுதந்திரம் கொடுப்பது என்றால் எப்படி முடியும் என்று யோசித்துப் பாருங்கள். பெண் கல்வி உ 'தனி உரிமை உலகில் பெண்களுக்கு சுதந்திரம் வேண்டுமென்ப வர்கள், பெண்களை நன்றாய்ப் படிக்கவைக்கவேண்டும். தங்கள் ஆண் பிள்ளைகளை இலட்சியம் செய்யாமல், பெண்களுக்கே செலவு