144 புரட்சியாளர் பெரியார் விடுமோ என்று கலங்கினார்கள். ஈ. வே. ராமசாமி மலேயாவிற்கு வராமல் தடுக்கும் முயற்சியில் இறங்கினார்கள். என்ன செய் தார்கள்? 'ராமசாமியும் அவர்கள் தோழர்களும் பெரிய புரட்சிக்காரர்கள்; காங்கிரசுக்காரர்கள்; பொதுமக்களைக் கலகம்பண்ணும்படி தூண்டுகிறவர்கள்; அவர்கள் இங்கு வந்தால், அரசாங்கத்திற்கு ஆபத்து. பொதுமக்களிடையே குழப்பம் உண்டாகும். ஆதலால் அவர்களை இந்நாட்டில் இறங்கவிடக்கூடாது. கப்பலில் இருந்த படியே திருப்பி அனுப்பிவிடவேண்டும்' என்று மலேயா அரசிடம் முறையிட்டார்கள். முறையீடு பலித்ததா? இல்லை. ஆயினும் இக்கூட்டத்தார் சும்மா விடவில்லை. 'தேசத் துரோகிகள் வருகின்றார்கள்; நாத்திகர்கள் வருகின் றார்கள். அவர்களை ஒருவரும் வரவேற்கக்கூடாது. தமிழ் மக்கள் அவர்களுடைய கூட்டங்களுக்குப் போகக்கூடாது. அவர்கள் சொற்பொழிவுகளைக் கேட்கக்கூடாது' என்று நாடு முழுவதும் விளம்பரம் செய்தார்கள். நேர்மாறான பலன் விளைந்தது. இக் காரணத்தால் ஈ.வே. ராவையும் அவருடைய தோழர்களையும் வரவேற்க எண்ணற்ற மக்கள் கூடினார்கள். பினாங்கு துறை முகத்தில் அய்ம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடி, ராமசாமிப் பெரியாரை வரவேற்றார்கள். இந்துக்கள், இஸ்லாமியர்கள் அனைவரும்கூடி ஏராளமான மாலைகள் சூட்டி, வரவேற்பு இதழ்கள் படித்துக்கொடுத்து, வரவேற்றார்கள். அது வரை எந்த இந்தியத் தலைவருக்கும் அத்தகைய வரவேற்பு நடை பெற்றதில்லை என்று பினாங்கில் வெளியான எல்லா செய்தித் தாள்களும் குறிப்பிட்டுப் பாராட்டின. மலேயாவாழ் பாமர மக்கள் பலர் அறியாமையால் ஈ. வே. ராவின் பாதத்தில் விழுந்து வணங்கினர். அவர் நடந்துசென்ற அடிச் சுவட்டை கண்களில் ஒத்திக்கொண்டவர்கள் பலராவர். மனிதர் காலை மனிதர் தொட்டு வணங்கும் காட்டுக் கால உளப்போக்கை மாற்றுவதற்கே வாழ்நாளைச் செலவிட்ட பெரியாரை இப்படிக் கும்பிட்டார்கள், அப்பாவி மக்கள். ஈப்போவில் நடந்த தமிழர் சீர்திருத்த மாநாட்டில் தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், யாழ்ப்பாணிகள், இஸ்லாமியர். ஆகியோர் குழுமியிருந்தார்கள். அம் மாநாட்டை ராமசாமிப் பெரியார் தொடங்கிவைத்து உரையாற்றினார். பின்னர் 26-12-1929இல் சிங்கப்பூரில் நடந்த இந்திய சங்க மாநாட்டிலும் ராமசாமிப் பெரியார் கலந்துகொண்டு உரையாற்றினார். மலேயாவில் சூறாவளிப் பயணஞ்செய்து, நாள்தோறும் காலை முதல் நள்ளிரவு வரையிலும் அய்ந்தாறு கூட்டங்களில் பெரியார்
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/156
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை