பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 புரட்சியாளர் பெரியார் இணைத்ததா? மக்கள் அனைவரையும் ஒரே சமுதாயமாக இல்லையே. பாண்டி நாடு, சோழ நாடு, பல்லவ நாடு. கொங்கு நாடு என்பவை நைந்துபோன கோணிப்பைகளால் கட்டப்பட்ட நெல்லிக்காய் மூட்டைகளாகவே இருந்து வந்தன. எனவே, சொற்ப சாக்கு கிடைத்தால்போதும். 'நாங்கள் சைவப் பிள்ளைகள், அவர்கள் அசைவப் பிள்ளைகள் நாங்கள் சைவ முதலியார்கள், அவர்கள் அசைவ முதலியார்கள். நாங்கள் சைவ ரெட்டியார்கள், அவர்கள் அசைவ ரெட்டி யார்கள். நாங்கள் வன்னியக் கவுண்டர்கள், அவர்கள் அன்னியக் கவுண்டர்கள். நாங்கள் அருந்ததியர்கள், அவர்கள் பள்ளர்கள்..' இப்படித் தனியாகச் சாதியடிப்படையில் சிதறி ஓடுவதே, நம் வாழ்க்கை முறை. மேற்கூறிய பத்து சாதிகளாகப் பிரிந்து நின்றதோடாகிலும் நிறைவுகொண்டோமா? இல்லை. பிள்ளைக் குள்ளேயும் பல சாதிப் பிரிவுகள்; முதலியார்களுக்கும் வகை வகை யான முதலியார்கள், ரெட்டியார்களுக்கும் தனித்தனி கிளைகள். வன்னியர்கள் சளைத்தவர்களா? நாயக்கர் வேறு; கவுண்டர் வேறு; படையாச்சி வேறு, அருந்ததியர்களிலும் பல பிரிவு. ஓர் உட்சாதி மற்றொரு உட்சாதிக்குப் பெண் கொடுக்கக்கூடாது; எடுக்கவும் கூடாது. உட்சாதிக்குள்ளேயே கொள்வினை, கொடுப்பினை கூடாதென்றால், சாதிக்குச் சாதி கலப்பைப்பற்றி எண்ண முடியுமா? அந்த அபசாரத்தைப்பற்றிப் பேசினால் நாக்கு அழுகிப்போகும் என்றுதானே கிழடுகள் வசைமாரி வழங்கும். அதற்கும் அஞ்சாமல், நாக்கும் அழுகிவிடாமல், மீண்டும் மீண்டும் 'மானுட சமுத்திரம், அதிற்சங்கமமாகு' என்று தொடர்ந்து சொன்னால், கூச்சல் தூற்றலாகத் தொடங்கி, மண் வாரி இறைப்பதாகத் தழைத்து, மலைப் பிஞ்சு மழையாகவே முடியும். பழைமைக்குப் பொய்மைக்கு அநீதிக்கு பஜனைபண்ண மட்டுமே, கருத்துரிமை என்னும் மேல் மூச்சுக்கு இடம் இருந்தது. 'ஆயிரம் உண்டிங்கு சாதி' என்னும் வாய்மை வாக்குமூலத்தை பறைசாற்றினார், விடுதலைக்கவி பாரதியார். சாதிக் கொடுமைகள் வேண்டாம்' என்று வேண்டுகோள் விடுத்தார் பாரதியார். இத் இத் 'தவறுகளுக்காக' அவரை வறுமையில் வாட விட்டு, வேண்டும் இப் பிராமணனுக்கு' என்று உள்ளுக்குள் உவகை கொண்டவர்களும் உண்டு. 'சாதிக் கொடுமைகள் வேண்டாம்' என்றால் ஆத்திரம் பொங்குவானேன்? 'நாம் பார்த்து ஏற்படுத்தியதா சாதி? பகவான் படைத்த போதே இன்னின்ன சாதியான் என்று படைத்துவிட்டான். அதைப்பற்றி பேசுவது அபசாரம். அவனவனுக்கு விதித்த வருண