பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயல்நாட்டுப் பயணங்கள் 149 40 ஆயிரம் பெண்கள் தினம் அய்ந்தணா கூலிக்கு பூமிக்குள் வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள். இந்தக் கொடுமையையும், ஆபாசத்தையும் நிறுத்த தொழில் கட்சி அரசாங்கம் என்ன செய்தது? தோழர் லான்ஸ்பரி அவர்கள் இங்கிலாந்தில் தொழிலாளர்களை ஆதரிக்கவேண்டும் என்று பேசுகிறார். ஆனால் இந்தியர் விஷயத் தில் தோழர் காந்தியையும், இர்வின் பிரபுவையும், கொடுமையான வட்ட மேஜை மகாநாட்டையும் ஆதரிக்கிறார். அவ்வளவோடு மாத்திரமல்லாமல் இந்தியாவானது இந்திய அரசர்களும், ஜமீன் தாரர்களும், முதலாளிமார்களும், அய்ரோப்பிய வியாபாரிகளுமே ஆதிக்கம் வகிக்கும்படியானதும் தொழிலாளிகளுக்கும், குடித்தனக் காரர்களுக்கும் பாத்தியமும், பொறுப்பும், இல்லாததுமான ஒரு அரசியல் சபை மூலம் இந்திய நிர்வாகம் நடக்கும்படியான காரியத்திற்கு உதவிசெய்கிறார். இதற்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்? தோழர் லான்ஸ்பரி அவர்கள் யுத்தத்தையும், யுத்த முஸ்தீபை யும் வெறுக்கிறதாகச் சொல்லுகிறார்கள். ஆனால் இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் துருப்புக்களையும் பிரிட்டிஷ் வைஸ்ராயையும் திருப்பி அழைத்துக்கொள்ள மறுக்கிறார். கடைசியாக இருந்த தொழிற்கட்சி அரசாங்கமானது இரண்டு வருஷ காலத்தில் அனுப்பிய ஆகாய சண்டைக் கப்பல்களையும், வெடிகுண்டுகளையும், மோட்டார் பீரங்கி பீரங்கி வண்டிகளையும், கவசம் செய்த மோட்டார் வண்டிகளையும், யந்திரத் துப்பாக்கி களையும், பிரிட்டிஷ் பட்டாளங்களையும் கணக்குப் பார்த்தால் பால்ட்வின் அரசாங்கமானது தனது 5 வருஷம் ஆட்சியில் அனுப்பப்பட்டதைவிட அதிகமாகவே இருக்கிறது. தோழர் களே! இவற்றிலிருந்து பிரிட்டிஷ் தொழிலாளர் பார்ட்டி என்று சொல்லப்படும் சமதர்ம பார்ட்டியின் யோக்கியதையை அறிந்து கொள்வது என்பது எங்களுக்கு மிகக் கஷ்டமாகவே இருக்கிறது. 'ஆதலால், யார்க்க்ஷையர் தொழிலாளிகளே! நீங்கள் இந்தப் போலிக் கட்சிகளையும், கொள்கைகளையும் நம்பாமல் மனித சமூக விடுதலைக்கும், சுதந்திரத்துக்கும், சமத்துவத்துக்கும் உண்மையாகவே போராட உலக தொழிலாளர்களின் ஒற்று மையை எதிர்நோக்கிக்கொண்டிருங்கள்' என்று முழங்கினார். இந்தியாவில், நம்முள், எல்லோர்க்கும் சரி பங்கு கேட்டுப் போரிட்டுக்கொண்டிருந்த ஈ. வே. ராமசாமி, பிரிட்டானிய ரிடையே பேசும்போது, அவர்கள் பொதுவாக இந்தியர்களுக்கும் குறிப்பாக இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கும் இழைக்