பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 விழிப்பூட்டும் கிளர்ச்சிகள் இரண்டாவது கட்டாய இந்திப் போரின் வெற்றியைக் கொண்டாடுவதற்கு முன்பே, பெரியார் மற்றோர் போராட்டத்திற்கு படை திரட்ட வேண்டியதாயிற்று. வகுப்புரிமைப் போராட்டம் உரிமைப் 1950ஆம் ஆண்டு ஜூன் திங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருவர் வகுப்புவாரி சேர்க்கை முறையை (Communal G.O.) எதிர்த்து வழக்குப் போட்டனர்; அரசியல் சட்ட வரைவுக் குழுவினருள் ஒருவரான சர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், மேற் கூறிய இருவருக்காக வாதாடினார். சென்னை மாகாண மருத்துவக் கல்லூரி, பொறியியற் கல்லூரிக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுத்ததை எதிர்த்து வழக்குத் தொடுத்தனர். இதில் வினோதம் என்னவென்றால், இருவரில் ஒருவருடைய பிள்ளை மனுவே போடவில்லை. இருப்பினும் தத்துவ ரீதியாக தீர்ப்பு கூறப்பட்டது. என்ன தீர்ப்பு? 'சென்னை மாகாண அரசு நடை முறைப்படுத்தி வரும் வகுப்புவாரி ஆணை இந்திய அரசியல் சட்டத்திற்கு முரணானது' என்பது தீர்ப்பு. இம் முடிவு 1950 ஜூலைத் திங்களில் கூறப்பட்டது. ஆகவே, கல்லூரி சேர்க்கைகளிலும் பதவிகளுக்குத் தேர்ந்தெடுப் பதிலும் பார்ப்பனருக்கு இவ்வளவு, முஸ்லீம்களுக்கு இவ்வளவு, கிறுத்தவர்களுக்கு இத்தனை, பின்தங்கியவர்களுக்கு இந்த விழுக் காடு, தாழ்த்தப்பட்டோருக்கு இத்தனை என்று பங்கு போட்டுக் கொடுத்ததற்குப் பதில், இனிமேல், 'மார்க்கை'ப் பார்த்து, அதிக மதிப்பெண் அதிக தகுதி என்னும் அடிப்படையில் சேர்க்க வேண்டும். அப்படியே ஆட்களை வேலைகளுக்குப் பொறுக்க வேண்டும், என்னும் நிலை உருவாயிற்று. இருபது ஆண்டு கால வகுப்புரிமைக்குப் பிறகும் தாழ்த்தப்பட்டோர், பின்தங்கியோர் தங்களுக்குரிய நியாயமான பங்கை முழுமையாகப் பெற முடிய வில்லை. உள்ள உரிமையை இழந்துவிட்டால், மீண்டும் ஏர் உழவும் வண்டி இழுக்கவும் செக்காட்டவும் பறையடிக்கவும் போக