152 புரட்சியாளர் பெரியார் வேண்டிய நிலைக்குப் பொதுமக்கள் தள்ளப்படுவார்கள். இதை யுணர்ந்த பெரியார், உடனே கிளர்ச்சி செய்யத் தலைப்பட்டார். மீண்டும் சூறாவளிப் பயணத்தில் ஈடுபட்டார். அரசியல் சட்ட முதல் திருத்தம் 01 14-8-50இல் நாடெங்கும் வகுப்புரிமை நாள் கொண்டாடும்படி 8-8-50இல் வேண்டுகோள் விடுத்தார். தமிழகம் முழுவதுமே திரண்டு எழுந்தது. பார்ப்பனர் அல்லாத மாணவர்கள், பொது மக்கள், அனைவரும் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, வகுப் புரிமைக் கோரிக்கைக்கு ஆதரவு கொடுத்தார்கள். 3-12-50இல் திருச்சியில் வகுப்புரிமை மாநாடு ஒன்றை பெரியார் கூட்டினார். அனைத்துக் கட்சியினரும் கலந்துகொண்டனர். வகுப் புரிமை தீர்மானம் நிறைவேறியது. அது சமயம் இந்திய அமைச்சரவையில் இருந்த சர்தார் வல்ல பாய் பட்டேல் தென்னாட்டுக்கு வந்தார். இங்கிருந்த கொந்தளிப் பின் அளவையும், நியாயத்தையும் சரியானபடி உணர்ந்தார். அவர் இந்திய அமைச்சரவையிலும் நாடாளுமன்றத்திலும் பெரியாரின் கோரிக்கைக்கு வலுவு உண்டாக்கினார். இந்திய அரசியல் சட்டத் தின் விதி 15இல் நாலாவது உட்பிரிவாக ஒரு புதுப் பிரிவை திருத்த மாக கொணரச்செய்தார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்திருத்தமாவது, விதி 15 (4) குடிமக்களுக்குள் சமூகத்தி லும், கல்வியிலும் பின் தங்கியுள்ள எந்த வகுப்பினருக்கும் அல்லது தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பழங்குடியினருக்கும் அவர்கள் முன் னேற்றம் கருதி அரசு எந்த தனி ஏற்பாட்டினைச் செய்வதையும் இந்த விதியில் ஒரு பிரிவோ அல்லது விதி 29இன் 2ஆவது உட் பிரிவோ தடை செய்யாது' என்பதாகும். இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த ஓராண்டு காலத் தில், 1951 பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்ட இந்த திருத்தமே அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட முதல் திருத்தம் ஆகும். இந்த சிறப்பு பெரியாரைச் சாரும். இதன் விளைவாக முதலில் தாழ்த்தப்பட்டோருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு செய்ய உரிமை வழங்கிய அரசியல் சட்டம், பின் தங்கியவர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யவும் வழி வகுத்தது. அதனைப் பயன்படுத்தி, சென்னை மாநில அரசு, பின்தங்கியவர் களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்து, நலிந்த அப்பிரிவினர்களைக் காப்பாற்ற முடிந்தது.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/164
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை