விழிப்பூட்டும் கிளர்ச்சிகள் 153 அரசியல் சட்டத்தைத் திருத்திய பிறகு, இந்திய அரசும், பிற மாநில அரசுகளும் அவற்றின் பதவிகளில் பின் தங்கியவர்களுக்கு ஒதுக்கீடு செய்து, ஓரளவாவது அவர்கள் அனைத்திந்திய அலுவல்களிலும், மாநில பதவிகளிலும், நுழைய வழி செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை. மறுபடியும் இந்திய அரசு காகா காலேல்கர் என்னும் காங்கிரசு தலைவரின் தலைமையில் ஒரு பின்தங்கிய வகுப்பார் குழுவை நிறுவிக் காலம் கடத்திவிட் டது. அக்குழு, பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய பரிந் துரைத்த பிறகும் இந்திய அரசு அதை ஏற்று, இன்றுவரை ஆணை பிறப்பிக்கவில்லை. வட மாநிலங்கள், அண்மைக்காலம் வரை யில் பின் தங்கியவர்கள்பற்றி சிறிதும் கவனம் செலுத்தவில்லை. எழுபத்தேழில் நடந்த பொதுத் தேர்தலில், ஜனதா கட்சி, பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்வதாக வாக்குக் கொடுத்து, வெற்றி பெற்று, வடக்கே சில மாநில ஆட்சிகளைப் பிடித்தது. அதை ஒட்டி பீகாரிலும், உத்திர பிரதேசத்திலும் பின்தங்கியவர் களுக்கு நூற்றுக்கு இருபது இடங்களை ஒதுக்குவதென்று முடிவு செய்ததால், உள்நாட்டுப் போரையே மேற்குலத்தார் நடத்து கிறார்கள். இதற்குக் காரணமாக இருந்த இரு அரசுகளும் கவிழ்க் கப்பட்டன. அய்ம்பது ஆண்டுகளாக தமிழ் மாநிலத்திலும் ஏன் தென்னக மாநிலங்களிலும் நடைமுறையாகிவரும் ஒதுக்கீடு முறையை ஓரளவே செயல்படுத்த முயன்றாலே, வட மாநிலங்களில் கலவரம் தொடர்வது ஏன்? அங்கே ஒரு தந்தை பெரியார் இல்லை. மக்களைப் பக்குவப்படுத்தும் தன்மான இயக்கம் இல்லை. ஆயினும் அண்மைக் காலத்தில் வட மாநில பின் தங்கியவர்களும் விழிப்படையத் தொடங்கியுள்ளார்கள். அரசு அலுவல்களிலும் கல்வி நிலையங்களிலும் தங்கள் பங்கைக் கேட்கத் தலைப்பட் டுள்ளார்கள். பெரியாரைப்பற்றியும் தன்மான இயக்கத்தைப்பற்றி யும் அறிந்துகொள்ள முனைந்துள்ளார்கள். எனவே இந்திய அரசு தனது எல்லாத் துறை அலுவல்களிலும் பின் தங்கியவர்களுக்கு உரிய இடங்களை ஒதுக்கீடு செய்வதில் காலந்தாழ்த்தக்கூடாது. 1952இல் நடந்த முதல் பொதுத் தேர்தலின்போது காங்கிரசுக்கு எதிராக அய்க்கிய முன்னணி உருவாயிற்று. சென்னை மாகாணத் தில், காங்கிரசுக் கட்சி தோல்வியடைந்தது. தோற்கடித்ததில் பெரியார் பங்கு பெரியது; அவரே பெருங் காரணமாக விளங் கினார். இருப்பினும் இராசகோபாலாச்சாரியார் காங்கிரசு அமைச்சரவை நிறுவ முடிந்தது. காரணம், அய்க்கிய முன்னணியில் வளர்ந்த கருத்து வேற்றுமை.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/165
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை