154 புரட்சியாளர் பெரியார் குலக் கல்வி திட்டம் முதல் அமைச்சர் இராசகோபாலாச்சாரியார் 1953ஆம் கல்வி ஆண்டு முதல், நாட்டுப்புறத் தொடக்கப் பள்ளிகளில், குலக் கல்வி திட்டத்தை செயல்படுத்த ஆணையிட்டார். அப்படி யென்றால் என்ன? நாட்டுப்புற மாணாக்கர் மற்றவர்களைப்போல, நாளொன்றுக்கு அய்ந்து மணி நேரம் பள்ளியில் படிக்கவேண்டாம். மாறாக மூன்று மணி நேரம் படித்தால் போதும். மற்ற நேரம் வீட்டிலிருந்து குலத் தொழிலைக் கற்றுக்கொள்ளட்டும். ஆசிரியர்களைப் பொறுத்த மட்டில், இருமுறை, மூன்று மணி நேரங்கள் வேலைசெய்யவேண்டும்; பழைய ஊதியத்திற்கே. ஏன் இத்திட்டத்தைப் புகுத்தினார்? 'பொதுமக்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும். அந்த அளவு கற்றுக்கொண்டு, அவரவர் பரம்பரைத் தொழிலைப் பார்க்கவேண்டும்' என்பது முதலமைச்சரின் கோட்பாடு. இது மேட்டுக் குடிகளுக்குப் பாதுகாப்பு. சாதாரண மக்களை இருந்த நிலையிலே அடைக்கிவைப்பது ஆகும். இப்படியொரு விவகாரத்திற்கான கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தால், அதைப்பற்றிய கருத்து வேறுபாடுகள் வளரும். அக்கருத்து மோதல்களில், காலம் கழியும். கிளர்ச்சி ஏற்பட்டா லும் பரவாயில்லை; அக்கிளர்ச்சிகளை அரசியல் சிக்கல்களாக்கி விடலாம். காங்கிரசைக் கவிழ்ப்பதற்கான சதி என்று திசை திருப்பி லிடலாம். காங்கிரசின் பேரால் கழுதையை நிறுத்தினாலும் ஒட்டுப்போடு என்று பொதுமக்களை ஆயத்தப்படுத்தியிருக் கிறோம். கட்சிமேல் இருக்கும் பக்தி காரணமாக, அவர்கள் புத்தி யைப் பயன்படுத்த முயலமாட்டார்கள். ஆகவே, நீண்ட நாளைய கிளர்ச்சியில் நீதிக் கட்சியும் தன்மான இயக்கமும் பெரியாரும் சிக்கிக்கொள்ளலாம். பொது உடமைக் கொள்கையையும் சாதி, மத ஒழிப்புக் கொள்கையையும் பரப்புவதில் இருந்து வேறு பக்கம் திருப்பித் தொலையலாம். இப்படி, ஏற்றுக்கொண்டாலும் கெடுதி, எதிர்த்தாலும் கெடுதி என்னும் இருமுனைத் தீங்கான, குலக் கல்வி முறையை, முதல் அமைச்சர் இராசகோபாலாச்சாரியார் திணித்தார். முதலமைச்சர் இத்திட்டத்தை அமைச்சரவையில் வைத்து ஒப்புதல் பெறவில்லை, கல்வி அமைச்சருக்கும் தெரிவிக்கவில்லை. கல்விச் செயலருக்கும், பொது கல்வி இயக்குனர் அரைவேளை படிப்புக்கு ஆணையிட்ட பிறகே தெரியவந்தது. இது காங்கிரசு கட்சியின் திட்டங்களில் ஒன்று அல்ல என்பதையும் இங்கே சுட்டிக் காட்டவேண்டும்.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/166
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை