பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிப்பூட்டும் கிளர்ச்சிகள் 155 இந்நிலையில் இராசகோபாலாச்சாரியார் இயக்குனரோடு மட்டும் இரகசியமாகப் பேசிப் படிப்பை பாழாக்கியதின் உள் நோக்கத்தை ஊகிக்கலாம். அத்தகைய திட்டத்திற்கு எவ்வித தேவையும் இல்லை. அதனால் நன்மை ஏற்படும் என்று தவறாகக்கூட நினைப்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. ஏன்? 1937இலேயே திரு. சி. ஆர். பிரதமரானபோது, அரைவேளைப் பள்ளி போதுமென்னும் வகையில் புதிய திட்டத்தை அனுப்புமாறு அப்போதிருந்த பொதுக் கல்வி இயக்குநர் திரு. ஸ்டேதமுக்கு, நேர்முக கடிதத்தின் வழியாக ஆணையிட்டார். இயக்குநர், அதை ஒப்புக்கொள்ளவில்லை. அத்தகைய திட்டத்திற்கு தேவையிருப்ப தாகவோ அதனால் நன்மை விளையுமென்றோ உறுதியாகச் சொல் லும் நிலையில் இல்லை. எனவே மாகாணம் தழுவிய அரை வேளைப் படிப்புத் திட்டத்திற்குப் பதில், சோதனையாக, பின் தங்கியவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் அதிகமாக உள்ள பெரிய குளம் வட்டத்துப் பள்ளிகள் இம்முறையைக் கையாளலாம் என்று மட்டுமே சுற்றறிக்கை அனுப்புவது நல்லது. ஓராண்டிற்குப்பின், அதன் பலனை மதிப்பிட்டு, மேற்கொண்டு எடுக்கவேண்டிய நட வடிக்கையை எடுப்போம் என்று எழுதினார். பிரதமர் இராச கோபாலாச்சாரியார் அதை ஏற்றுக்கொண்டு பெரியகுளத்தில் மட்டும் வெள்ளோட்டம் பார்க்கச் சொன்னார். ஓராண்டு முடிந்த தும், 'இதை மக்கள் விரும்பவில்லை. சிறுவர்கள் வந்தால் முழு நேரம் வருகிறார்கள். இல்லையேல் வருவதே இல்லை' என்று அறிக்கை கொடுத்தார். அதோடு, அம்முறை கைவிடப்பட்டது. அப்படியிருந்தும், நல்ல நினைவாற்றல் உள்ள இராசகோபாலாச் சாரியார் 1953 ஜூன் முதல் இத்திட்டத்தை மாகாணம் முழுதும் புகுத்தினார். ஏழை எளியவர்களின் கல்வி வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதும் பெரியாரின் சமதர்மத் தொண்டு தழைக்காது பார்த்துக்கொள்வ துமே உள் நோக்கம். எதிர்பார்த்தபடி பெரியார் கொதித்தெழுந்தார். அறிஞர் அண்ணா பொங்கியெழுந்தார். ஏன்? ஏழைப் பங்காளர் காமராச ரும் 'இந்த பைத்தியக்காரத் திட்டத்தை ஒழித்துக் கட்டிவிட்டே மறுவேலை' என்று செய்தி கேட்டவுடன் முழங்கினார். காங்கிரசு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் மிகப் பெரும்பாலோர், எதிர்ப்பை எழுதிக் கையெழுத்திட்டுக் காமராசரிடம் கொடுத் தார்கள்.