156 புரட்சியாளர் பெரியார் குலக் கல்வி முறைக்கு எதிர்ப்பாக ஊர்தோறும் கண்டனக் கூட்டங்கள்; வட்டங்கள்தோறும் எதிர்ப்பு மாநாடுகள்; ஏடுகள் அனைத்திலும் எதிர்ப்புக் கணைகள்; பள்ளிக்கூடங்களில் வருகைக் குறைவு. நாகையிலிருந்து சென்னை வரை குலக் கல்வி எதிர்ப்புப் படையொன்று நீடாமங்கலம் ஆறுமுகம் தலைமையில் பிரச்சாரம் செய்துகொண்டு வந்தது. மூதறிஞர் இராசகோபாலாச்சாரியார் மூக்கறுபடக்கூடாது என் னும் ஒரே காரணத்திற்காக, 'அவர் பேரில் நம்பிக்கை இருக்கிறது' என்னும் முடிவை சட்ட மன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றச் செய்தார் காமராசர். இவ்வளவு பெருந்தன்மைக்குக் கிடைத்த கைம்மாறு என்ன? முதல்வர் குலக் கல்வித் திட்டத்தை எடுக்கமாட் டேன் என்று அடம்பிடித்தார். தான் பதவியிலிருந்து விலகிவிடப் போவதாகச் சொல்லிவிட்டு, தன் சார்பில் திரு. சுப்ரமணியத்தை முதல்வராக்கப் பார்த்தார். திரு. சி. சுப்ரமணியம் குலக்கல்வியை ஆதரித்த பிரிவினர். ஆகவே, அவருக்கு எதிராகத் தக்கவரை நிறுத்தவேண்டியதாயிற்று. டாக்டர் சுப்பராயனை முதலமைச்ச ராகும்படி காமராசர் அழைத்தார். அவர் இசையவில்லை. காமராசரைத் தவிர வேறு எவர் எதிர்த்தாலும் சி. சுப்ரமணியம் அதாவது இராசகோபாலாச்சாரியார் கட்சி-குலக் கல்வி முறை வெற்றிபெறும் என்பது எதிர்ப்பாளர்களின் கணிப்பு. எனவே காமராசர் சட்ட மன்ற காங்கிரசு கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிட நேர்ந்தது; வெற்றி பெற்றார்; அதே சி. சுப்ரமணி யத்தை கல்வியமைச்சராக்கி, அவரைக்கொண்டே குலக் கல்வித் திட்டத்தை எடுக்கச்செய்தார். காமராசர் தலைமைப் பதவிக்கு போட்டியிடுவதற்கு முன்பு தந்தை பெரியாரின் ஆதரவை, வாழ்த்தை நாடிப் பெற்றுக்கொண் டார். பொதுமக்கள் அனைவருக்கும் கல்வி மடை திறந்துவிட வாக்களித்தார். காமராசர் முதலமைச்சராக விளங்கிய 91 ஆண்டு கள், பெரியாரின் பேராதரவுடன், அவ்வாக்குறுதியை நிறை வேற்றினார். கல்விக்கு முதலிடம் தூங்கிக்கொண்டிருந்த புலியை இராசகோபாலாச்சாரியார் இரண்டாம் முறை இடறியது நல்லதாயிற்று. எப்படி? தமிழர்கள், காலாகாலமாகக் கல்வியின்மேல் அக்கறை செலுத் தவே இல்லை. தற்குறிகளாக இருப்பது அவமானம் என்று உணர வில்லை. பிள்ளைகளையாவது படிக்கவைக்க வேண்டுமென்றும் உறைக்கவில்லை. 1928-29ஆம் ஆண்டில்கூட போதிய பள்ளி
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/168
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை