அன்றைய சூழ்நிலை 5 ம தர்மத்தை சரியாகக் கடைப்பிடிப்பதே பிறவிப்பயன். சூத்திரனுக்கு பகவான் விதித்த கடமையைத் தவறாமல் செய்தால், அடுத்த பிறவியிலாவது மேல்சாதியாகப் பிறக்கலாம். இப்படி, ஜன்ம ஜன்மாந்திரம், சூத்திரன் பிராமணருக்குச் செய்யவேண்டிய கடமைகளைக் குறைவற நிறைவேற்றுவது ஒன்றே. "ஈசுவர கடாட்சத்தைப்" பெறுவதற்கு வழி; வேறு கதியில்லை.' இப்படி பத்து மந்திரங்களே கற்ற உள்ளூர் குருக்கள் முதல் மீனாட்சி திருமணத்தைத் தேன் சொட்டச் சொட்டக் காலட் சேபம் செய்யும் தீட்சிதர் வரை அளப்பார். மற்ற படிப்பாளிகள் சும்மா இருப்பார்களா? அவர்கள் புராணீகர்கள் ஆகி இதையும் அதையும் சேர்த்துக் கொட்டுவார்கள். அரைத் தூக்கத்திலே காலட்சேபம் கேட்ட ஆறுமுகம், தீட்சித ருக்குத் தனியாக வெண்சாமரம் வீசிக்கொண்டே, வாய்க்கு முன்னே ஒரு கையை வைத்துக்கொண்டு, பணிவே உருவாகி, சிறிய விளக்கத்தைக் கோருவார். . 'சாமிகாள்! இந்தக் கட்டைக்கு ஒன்று புரியவில்லை. பெரியவா ளிடம் சபையில் கேட்கக்கூடாதென்று, சும்மா இருந்துவிட்டேன். இங்கே யாரும் இல்லை. தேவாளுக்குச் சிறு விஷயம், எனக்கோ சந்தேகம்...' ஆறுமுகம், சொல்லி முடிப்பதற்குள், தீட்சிதர் எள்ளும் கொள்ளுமாகப் பொரிவார். உச்சிஷ்டம்; மண்டு; இவ்வளவு நேரம் கத்தினானே! எவ்வளவு அலுப்பா இருக்கும் என்று, புரியுதா உன் மர மண்டைக்கு? உன்னைக் கோபித்துக்கொள்ளுகிறேனே! அதைச் சொல்லி. நீயோ சூத்திரன், அப்புறம் புத்தி எப்படியிருக்கும்?' 'ஏழேழு பிறவிக்கும் உங்கள் காலடியில் கிடந்து தொண்டு செய்ய எனக்கு ஆண்டவன் அருள்பாலிக்கணும். சாமி! நான் நினைத்ததை நீங்கள் எப்படியோ தெரிந்து சொல்லிவிட்டீர்களே சாமி!' ஊரில் ஒருத்தரைக் கேட்டால் பிள்ளை என்கிறார். மற்றொரு வரைக் கேட்டால் முதலியார் என்கிறார்; மூன்றாமவர் அகமுடை யார் என்கிறார்; நாலாவது ஆள் நாயக்கர் என்கிறார்; அய்ந்தாவது பேர்வழி செட்டியார்; ஒருவர் நாட்டார்; இன்னொருவர் நாடார். இப்படி ஆளுக்கொரு சாதி சொல்லுகிறார். என்னுடைய எண்பது வயதில் சூத்திரச் சாதிக்காரனைப் பார்க்கவில்லை. சூத்திரர் யாரு சாமி?' எங்கே இருக்கிறார் சாமி? என்று திக்கித்திக்கி வெளிப் படுத்தினார். 'முதலியார் என்னடா முதலியார்? அவனும் முதலியார்; இவனும் முதலியார்; எவன் எவனோ முதலியார். இவன்களா வைத்துக்
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/17
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை