158 புரட்சியாளர் பெரியார் மேற்கூறிய உதவிகளால் பள்ளிகளில் படிப்போர் எண்ணிக்கை ஏறத்தாழ 20 இலட்சங்களிலிருந்து 48 இலட்சங்களாகப் பெருகி யது. புதிதாக 1,700-க்கு மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. உயர்நிலைப் பள்ளிகளில் 3-86 இலட்சம் மாணவ மாணவியர் படித்ததுபோய், 13 இலட்சம் பேர் படிக்கும் நிலை உருவாயிற்று. எல்லோர்க்கும் 11 வகுப்பு வரை இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. மடை திறந்த வெள்ளம்போல, குடிசை தோறும் கல்வி பாய்ந்தது. பெரியார் கனவு நனவாயிற்று. தொழிற் கல்லூரிகளிலும், பிற கல்லூரிகளிலும் மேல்பட்டப் படிப்பில்கூட தாழ்த்தப்பட்டோரும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்களும் தாராளமாக இடம்பெறும் நிலை அன்று உருவாகியது. 'தகுதி, திறமையைப் பாராமல், சாதி அடிப்படையில் இடங் களை ஒதுக்குவதால், தரம் குறைந்துவிடும்' என்று, அறுபது ஆண்டு காலமாகக் கத்திக்கொண்டே இருப்பது, தமிழகத்தின் வாடிக்கை யாகிவிட்டது. கர்மவீரர், காமராசர் முதல் அமைச்சராக இருந்தபோது,இது பற்றி ஒரு புயலைக் கிளப்ப முயன்றார்கள். 'எந்தத் தாழ்த்தப்பட்ட டாக்டர் தவறாக ஊசி போட்டதால், நோயாளி மாண்டுவிட்டார் என்று காட்டுங்கள். எந்தத் தாழ்த்தப் பட்ட பொறியியல் அதிகாரி கட்டிய முறையால் எந்தக் கட்டிடம் இடிந்து விழுந்துவிட்டது என்று காட்டிடுங்கள் பார்க்கலாம். எல்லார்க்கும் அறிவு, திறமை இருக்கிறது. வாய்ப்புக் கொடுத்தால் வளருகிறது' என்று மண்டையிலடித்துப் பதில் கூறினார். சாதி ஒழிப்பு இத்தகைய உணர்வினையும், சூழ்நிலையையும் தமிழ்நாட்டில் உருவாக்கிய பெருமையில் பெரும்பங்கு பெரியாருடையதாகும். அடுத்து சமூக இழிவை எதிர்க்கும் அடையாளக் கிளர்ச்சி ஒன்றைப் பார்ப்போம். 'இந்திய அரசியல் சட்டம், இந்துமதப் பாது காப்பிற்காகச் சூதாகச் செய்யப்பட்டது. இந்துமதப் பாதுகாப்பு என்பது நம்முடைய 'சூத்திரத் தன்மை"யைப் பாதுகாப்பதாகும். அதில் சாதி ஒழிப்புக்கு இடம் வைக்கவில்லை. ஆகவே, இது நம்மை காலாகாலத்திற்கும் சின்ன சாதிகளாக வைத்து, இழிவுபடுத்து வதற்குத் துணை நிற்கிறது. இந்திய நாட்டோடு சேர்ந்திருப்பதால் அல்லவா, இழிவுபடுத்தும் இச்சட்டத்திற்கு நாம் அடங்கிப் போக வேண்டியதாகிறது. இந்தியாவிலிருந்து பிரிந்து போய்விட்டால், எல்லாரும் சமத்துவமாக, சாதி ஏற்றத்தாழ்வு ஒழிந்த சமுதாய
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/170
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை