பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிப்பூட்டும் கிளர்ச்சிகள் 159 மாக வாழ்வதற்கு வழிவிடும், நமக்கு ஏற்ற, அரசியல் சட்டத்தை உருவாக்கிக்கொள்ளலாம்' என்பது பெரியாரின் கருத்து. சாதி ஒழிப்புக்கு நம் அரசியல் சட்டம் இடம் வைக்கவில்லை என்ற குறையை பொதுமக்கள் கவனத்திற்குக் கொண்டுவர பெரியார் விரும்பினார். அரசியல் சட்ட எரிப்பை அதற்கு வழி யாகக் கொண்டார். சட்ட எரிப்புப் போர் 26-11-1957 அன்று, பெரியார் ஆணைப்படி தமிழகமெங்கும், அரசியல் சட்ட எரிப்புப் போர் நடந்தது. அச்சட்டத்தின் குறை பாடுடைய பகுதியை அச்சிட்டு ஆயிரக்கணக்கில் வழங்கப்பட்டது. ஏறத்தாழ நாலாயிரம் திராவிடக் கழகத்தினர், அரசியல் சட்ட எரிப்பில் பங்குகொண்டு சிறைப்பட்டார்கள். அநேகர் நீண்ட சிறை வாழ்க்கைக்கு ஆளானார்கள். அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை குறிப்பிட்டு, 'இந்தத் தமிழ்நாட்டு வரலாற்றை எடுத்துக்கொண்டாலும் சரி-இந்திய வரலாற்றை எடுத்துக்கொண்டாலும் சரி-சமுதாயப் பிரச்சினைக் காக- சாதி ஒழிப்பிற்காக, ஒரே நாளில் 3,500-4,000 பேர்கள் சிறை சென்றது நமது கழகம் ஒன்றில்தான்' என்று பெரியார் திருச்சியில் பொதுக் கூட்டம் ஒன்றில் பெருமிதத்தோடு முழங்கினார். அவ்வுரையில் 'இன்றுள்ள அத்தனை அரசியல் கட்சிக் காரர்களும் எங்களை ஒழிக்கப் பாடுபடுகிறார்களே தவிர, சாதி ஒழியவேண்டியதற்கான பரிகாரம் என்ன என்பதுபற்றி ஒருவனும் கவலைப்படுவது கிடையாது' என்று பெரியார் அறிவித்தது, மாற் றறியாத உண்மையாகும். பிள்ளையார் சிலை உடைப்பு தந்தை பெரியார் ஈ. வே. ராமசாமியின் நீண்ட வாழ்நாளில் பற்பல கிளர்ச்சிகள், போராட்டங்கள், முன்னே வந்து மின்னு வதைக் காணலாம். அதிலே ஒன்று கணபதி உருவப் பொம்மை உடைப்பு ஆகும். 1953ஆம் ஆண்டு மே திங்கள் 27ஆம் நாள் தமிழ்நாடெங்கும் புத்தர் விழா கொண்டாடி அன்று மாலை 6 மணிக்கு, வருணாசிரம மருத்துவமாக, நோயை ஒழிக்கக் கடைசி 'பிள்ளையார் பொம்மையை பொதுக் கூட்டத்தில் உடையுங்கள். அரசு 144 தடை உத்தரவு போட்டால் உருவத்தை உடைப்பதை நிறுத்திவிடுங்கள், அவரவர் வீட்டில் உடையுங்கள்' என்றார்.